Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலா சீதாராமனின் அயோத்தி அரசியல்.. குட்டிக்கரணம் அடித்தாலும் நடக்காது.. சேகர் பாபு கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்யத்தான் என்று சேகர்பாபு கூறியுள்ளார். நீங்கள் எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும், எவ்வளவு பொய்பரப்புரைகளை பரப்பினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் இன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தமிழ்நாட்டில் சில கோயில்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த விவகாரத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Sekar Babu accuses Nirmala Sitharaman of playing politics in Ram Temple kumbhabhishekham live broadcast

ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கோயிலினுள் உள்ள குழந்தை ராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த குழந்தை ராமர் சிலைக்கு, இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரமானது, பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ள காலம் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வு நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கோயில்களில் எல்இடி டிஸ்பிளே வைக்கப்பட்டு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், காஞ்சி காமாட்சியமன் கோயிலிலும் எல்இடி திரை வைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து நேரலையை காணும் வகையில் திரை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அனுமதியின்றி திரை வைக்கப்பட்டதால் அதனை காவல்துறையினர் அகற்றினர். கோயிலில் பஜனை செய்வதற்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி கடிதத்தில் கோயிலில் நேரலை எதுவும் இருக்காது என உறுதி அளித்திருந்த நிலையில் வாக்குறுதியை மீறி அமைக்கப்பட்ட எல்இடி திரையை அகற்றியதாகவும் காவல்துறையினர் விளக்கமளித்திருக்கின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிர்மலா சீதாராமன், “காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்.இ.டி. சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை "வயித்திலே அடிப்பது” என்பார்கள் என x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தமிழக அரசு குறித்து சரமாரியான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “கோயில்கள் மீதும், அறநிலையத்துறையின் மீதும் அவதூறு பரப்புகின்றனர். மத்திய நிதியமைச்சரே இவ்வாறு செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல; தேர்தல் வரவிருப்பதால் இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலில் பாஜக ஈடுபடுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் திமுக ஆட்சியை ஆன்மீகத்திற்கு எதிரானதாக சித்தரிக்கும் முயற்சியில் பாஜகவினரும், ஆளுநர் ரவியும் ஒன்றாக கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். கோயிலின் உள்ளே LED திரை அமைப்பது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட எதற்கும் தடைவிதிக்கவில்லை, ஆனால் முறையான அனுமதி பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியை ஆன்மீகத்திற்கு எதிரானதாக சித்தரிக்க முயற்சி செய்கின்றனர்.

ஆன்மீகத்தை ஆன்மீகமாக பார்க்கின்றபோது நாங்கள் எந்த தடையும் விதிக்க தயாராக இல்லை. ஆன்மிகத்தை அரசியலில் கலப்பதற்கும், அரசியலாக்குவதற்கும் முற்படுகிறபோதுதான் சட்டத்திற்கு உட்பட்டு இந்து சமய அறநிலையத்துறை முடிவுகளை மேற்கொள்கிறது. தொடர் பொய் பிரசாரங்களை பரப்புகிறார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்யத்தான். நீங்கள் எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும், எவ்வளவு பொய்பரப்புரைகளை பரப்பினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், உங்கள் எண்ணம் ஒரு போதும் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+