கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போலி சாமியார் சத்திய நாராயணன் கைது
சென்னை: சென்னையில் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியைத் தொடர் பலாத்காரம் செய்ததாகப் புகாரின் பேரில் சாமியார் சத்திய நாராயணன் என்பவரும் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் இளம்பெண். அவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து விநாயகபுரம் சூரப்பட்டு ரோடு லட்சுமிகாந்த் அம்மாள் தெருவில் உள்ள ஹீரடிபுரம் சர்வ சக்தி பீடத்தில் நிர்வாகியான சத்திய நாராயணன் என்பவரிடம் தனது பாட்டியுடன் சென்றுள்ளார்.

பிளஸ் 2
அப்போது அந்த பெண் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். பின்னர் அடுத்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் போது மறுபடியும் அதே ஆசிரமத்திற்கு வந்த அந்த மாணவிக்குச் சத்திய நாராயணனும், அவரது மனைவி புஷ்பாவும் ஜூஸ் கொடுத்துள்ளனர். அதைக் குடித்து மயக்க நிலைக்குச் சென்ற மாணவியைச் சத்திய நாராயணன் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

வெளிநாடு
இதையடுத்து அந்த இளம் பெண் (மேஜரான மாணவி) 2018ஆம் ஆண்டு திருமணமாகி தனது கணவருடன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அந்த பெண்ணை சாமியார் சத்திய நாராயணன் வலுக்கட்டாயமாக ஆசிரமத்திற்கு வரவழைத்து பல முறை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

கர்ப்பம்
இதனால் கர்ப்பம் அடைந்த அந்த இளம்பெண் ராயபுரத்தில் குழந்தை பெற்றெடுத்தார். மறுபடியும் தனது பாலியல் இச்சைக்கு இணங்க வேண்டும் என அந்த பெண்ணை சாமியார் மீண்டும் மிரட்டியதால் இளம் பெண் காவல் நிலையத்தில் சாமியார் மீது புகார் அளித்தார். இதையடுத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சத்திய நாராணயனையும் அவரது மனைவியையும் கைது செய்தனர்.

புகார்
இது போல் இந்த சாமியாரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களும் புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். பாலியல் சீண்டல், போலி சாமியார்களின் மாய வலை.. இவற்றில் சிக்கி பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு ஏற்படுமோ தெரியவில்லை.
-
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications