மொத்த ரவுடியும் பாஜகவில்.. ஒரு சீட் கூட தேறாது.. அதனால்தான் கழண்டுகிட்டோம்: பற்ற வைத்த அதிமுக மாஜி!
மதுரை: தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த ரௌடிகளும் பாஜகவில் தான் இருக்கின்றனர் என்றும், பாஜக ஒரு சீட் கூட பிடிக்க முடியாது என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
அதிமுக தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகபூப்பாளையும் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார்.

நீட் தேர்வை ஒழிக்க முடியாது: அப்போது பேசிய அவர், "நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனத் தெரிந்ததால் ஏழைகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவினார். ஆனால் இப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள்.
அனைவருக்கும் ரூபாய் 1000 கொடுப்பதாக கூறிவிட்டு தற்போது அனைவருக்கும் அல்வா கொடுத்துள்ளார்கள். அதிமுக அரசு அனைவருக்கும் பாரபட்சமின்றி மிக்ஸி கிரைண்டர் கொடுத்தது. அதேபோல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வாங்குகிறார்கள்.
கணக்கு புலிக்கு பல்லை பிடுங்கியாச்சு: செந்தில் பாலாஜி அதனை தொடங்கி வைத்தார். தற்போது அமைச்சர் முத்துசாமி தொடர்ந்து வருகிறார். அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கம்யூனிச கொள்கையையே திமுகவினரிடம் அடமானம் வைத்து விட்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கணக்கு கேட்ட பெரிய கணக்கு புலியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு அமைச்சரவையில் கடைசி துறையான தொழில்நுட்ப துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பல்லை பிடுங்கி உட்கார வைத்துள்ளனர்.
மொத்த ரவுடியும் பாஜகவில்: எங்கள் மீது துரும்பை வீசினால் நாங்கள் தூணை வீசுவோம். அதிமுக தேன்கூடு போன்றது. கலைத்தால் நாங்கள் கொட்டினால் தாங்கமாட்டீர்கள். தற்போது தமிழகத்தில் இருக்கும் ரவுடிகள் அனைவரும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். ஃபாஸ்ட்புட் தலைவர்களை பாஜக உருவாக்கி வருகிறது. மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி பித்து பிடித்தது போன்று கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் தற்போது ஊர் ஊராக நடந்து செல்கிறார்.
ஜனநாயக நாடான இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற நிலை இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக வரக்கூடாது? மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய குரலால் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இருந்த பாஜகவை தமிழகம் நிராகரித்தது. அப்போது "மோடியா? இந்த லேடியா? நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். அப்போது மக்கள் ஜெயலலிதாவை தேர்வு செய்தார்கள்.
பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகலாம். அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. குறிப்பாக கொரோனா தொற்று பரவல் காலத்தில் டாஸ்மாக், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வருவாய் இல்லாமல் கஜானா காலியான போதும் பொருளாதாரம் நிலைகுலையாமல் மக்கள் நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக கூடாது?
அன்றைக்கு மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்தது. எனவே எடப்பாடியார் பிரதமர் ஆக முழு தகுதியும் கொண்டவர். ராஜேந்திர பாலாஜி எடப்பாடியார் பிரதமர் ஆவார் என்றவுடன் சிரிப்பா? எதற்கு சிரிக்க வேண்டும்?
நாட்டின் பிரதமராக வரக்கூடிய அனைத்து தகுதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. அதனால்தான் நாங்களே கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்." எனப் பேசியுள்ளார் செல்லூர் ராஜூ.
-
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
இப்பவாது யோசிங்க எடப்பாடி.. அதிமுக தொண்டர்களின் பல்ஸை பிடித்த ஆதவ் அர்ஜுனா -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!











Click it and Unblock the Notifications