ஜஸ்ட் ரூ.2000 குடுங்க.. "செல்வமகள் சேமிப்பு" திட்டத்தில் ரூ.11 லட்சம் வருது.. ஆமா, பாதியில பணம் வருமா
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பொதுமக்கள் நன்மைக்காக, அடுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. அதன் விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
மத்திய, மாநில அரசாங்கங்கள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட "சுகன்யா சம்ருதி யோஜனா - Sukanya Samrudhi Yojana" என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடியால் ஆரம்பிக்கப்பட்டது.

செல்வமகள்: அதன்படி, இந்தியாவில் பெண் குழந்தைகளின் திருமண செலவு மற்றும் பிற செலவுகளுக்கான மாபெரும் சேமிப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் விளங்கி வருகிறது. அதாவது, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலேயே செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை ஆரம்பிக்கலாம்..
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 2021-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
குறைந்த முதலீடு: இதன் குறைந்தபட்ச முதலீடு ரூ.250. ஆரம்பத்தில் இந்தத்தொகையானது 1,000 ரூபாயாக இருந்தது.. அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச முதலீட்டு தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.250-க்குப் பிறகு, ரூ.50-ன் மடங்குகளில் அதாவது ரூ.300, ரூ.350, ரூ.400 என்பது போல் முதலீடு செய்து வரலாம். இந்தத் திட்டம் ஆரம்பிக்கபட்டபோது ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்பட்டது.
மெச்சூரிட்டி: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால் இந்த திட்டம் 21 ஆண்டுகளுக்கு பிறகுதான் முதிர்ச்சியடைகிறது.
15 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ரூபாய். செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தில் 21 ஆண்டுகள் கழித்து மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு 11,16,815 ரூபாய் கிடைக்கும்.
8 சதவீத வட்டி பெறப்பட்டாலும்கூட, 21 ஆண்டுகள் என்பது மிக அதிக நேரமாக சிலரால் கருதப்படுகிறது.. இதற்காகவே சில தளர்வுகளும் இந்த திட்டத்தில் வெளியாகி உள்ளன.
விதிமுறைகள் என்னென்ன: திட்டத்தைத் தொடங்கி 21 வருடங்களுக்கு முன்பே ஒருவருக்கு பணம் தேவை என்றால் என்ன செய்வது? முன்கூட்டியே பணம் திரும்பப் பெறுவதற்கான விதிகள் என்னென்ன தெரியுமா?
மகளின் 10ம் வகுப்புக்குப் பிறகு அல்லது 18 வயதுக்குப் பிறகு கணக்கில் இருந்து திரும்ப பெறும் வசதி இதில் உள்ளது. அதனால், முந்தைய நிதியாண்டின் மொத்த இருப்பில் 50 சதவீதம் வரை நீங்கள் எடுக்கலாம்... மகளின் மேற்படிப்புக்கான தொகையை திரும்பப் பெறுவதாக இருந்தால், மேற்படிப்புக்கான சான்று வழங்க வேண்டும். இது தவிர, பணத்தை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ பெறலாம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பணம் கிடைக்கும், அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு தவணை முறையில் பணம் எடுக்கலாம்.
1. சிறுமி தன்னுடைய திட்டத்தின் முதிர்வுக்கு முன்பே இறந்துவிட்டால், அவளது பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை வட்டியுடன் சேர்த்து பெறுவார்கள். ஆனால், இதற்கு சிறுமியின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
2. இந்த கணக்கு வைத்திருக்கும் சிறுமிக்கு நோய் ஏற்பட்டு, அதனால் சிகிச்சை பணம் தேவைப்பட்டால், முன்கூட்டியே கணக்கை முடித்துவிடலாம். ஆனால் மகளின் நோய் மற்றும் சிகிச்சை தொடர்பான ஆதாரத்தை வழங்க வேண்டும். எனினும் இந்த வசதி 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் கிடைக்கிறது.
3. இந்த கணக்கு தொடங்கப்பட்ட பெண் குழந்தை, அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கணக்கு முதிர்ச்சியடைவதற்குள் இறந்துவிட்டால், அந்த கணக்கை பாதியிலேயே மூடிவிடலாம்.
4. இந்திய குடியுரிமையை நீங்கள் கைவிட்டாலும் உங்கள் கணக்கு மூடப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த வழக்கில், அனைத்து பணமும் வட்டி சேர்த்து திரும்பும். ஆனால் நீங்கள் வேறு நாட்டில் குடியேறியிருந்து, இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை என்றால், முதிர்வு வரை இந்த கணக்கை நீங்களே தொடரலாம்.












Click it and Unblock the Notifications