அது தெரியாது! ஆனா ஜோதிமணியும், தவெக அருண்ராஜும் சந்தித்தது ஏன்? செல்வப்பெருந்தகை விளக்கம்
சென்னை: கரூர் எம்பி ஜோதிமணியும் தவெக நிர்வாகி அருண்ராஜும் சந்தித்தது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கியுள்ளார். அது போல் விஜய்- பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்தும் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் விஜய்- பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளிக்கையில் தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது.
திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு பேச்சு நடத்தி வருகிறது. இதுதான் எங்களுக்குத் தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என அகில இந்திய தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதியும் தரவில்லை என்றார். மேலும் ஜோதிமணியும் தவெக நிர்வாகி அருண்ராஜும் சந்தித்ததும் தற்செயலானது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.ராகுல் - விஜய் சந்திப்பு குறித்து யூகங்கள் எழுந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கரூரில் அந்த தொகுதி எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "அவரிடம் காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தியை சந்தித்து விஜய் பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளதே" என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ஜோதிமணி பதில் அளிக்கையில், விஜய் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. 2010ஆம் ஆண்டு ராகுலை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
அந்த இணைப்பு என்பது பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. எனவே விஜய் ஒன்றும் எங்களுக்கு தெரியாதவர் அல்ல. கரூர் கூட்ட நெரிசல் போன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடக்கும் போது தலைவர்கள் பேசுவது இயல்புதான். ஆனால் அதையே தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக சொல்லிவிட முடியாது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்ட காலமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே சமூகவலைதளங்களில் வருவதெல்லாம் அரசியல் கட்சிகளின் முடிவு என நாம் நினைக்கக் கூடாது. இவ்வாறு ஜோதிமணி தெரிவித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications