ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி.. ஸ்ட்ரெயிடா அமித்ஷாவுக்கே பதில்? ஈரோடு செங்கோட்டையன் அவ்ளோதானா
சென்னை: டெல்லியில் இருந்து திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன்.. அப்போது, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக கூறினார்.. அதிமுக வலிமை பெற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறிய செங்கோட்டையன் அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் பணிக்காக தொடர்ந்து போராடுவேன் என்றம் கூறியிருந்தார். இந்நிலையில், செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்து சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன், "ஹரித்துவாருக்கு சென்று ராமரை பார்க்க போவதாக செங்கோட்டையன் சொல்லும்போதே அனைவருக்கும் சந்தேகம் வந்தது.. ஹரித்துவாரில் சிவன்தான் ஃபேமஸ்.. எனவே செங்கோட்டையன் பார்க்க போன ராமர் அமித்ஷா..

ராமரை யாரெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களை சந்திக்க போகிறார் என்றே அர்த்தம்..அதன்படியே உள்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்தித்து வந்துள்ளார்.. அதிமுக ஒற்றுமைக்காகவே அவர்களை சந்தித்தேன் என்று சொன்னது, வேடிக்கையான ஒன்று.. ஆனால், வேறு ஏதோ அமித்ஷாவிடம் செங்கோட்டையன் பேசியதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி தரமான சம்பவம்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கும் சம்பவமானது பலரது கவனத்தை பெற்றுள்ளது.. அன்று ஜெயலலிதா அம்மா இருந்போது எப்படி ஹேண்டில் செய்தார்களோ, அதற்கு சற்றும் குறையாமல் எடப்பாடி ஹேண்டில் செய்து வருகிறார்..
டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்த நேரத்தில், ஈரோட்டின் மிக முக்கிய அதிமுக பிரபமுகர்களை சென்னைக்கு வரவழைத்து பேசியிருக்கிறார்
எடப்பாடி பழனிசாமி,.. அப்போது பலரும் தங்களது ஆதரவு உங்களுக்குதான் என்று எடப்பாடியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளனர்..
அதாவது செங்கோட்டையன் பஞ்சாயத்து பேசும்நேரம், அவரது தொகுதியிலிருந்தே நிர்வாகிகளை அழைத்து பேசியது கவனம் பெற்றுள்ளது..
செங்கோட்டையன் பவர்
அதேபோல செங்கோட்டையனுக்கு ஈரோட்டை தாண்டி பெரிதாக செல்வாக்கு கிடையாது.. தினமும் 10 ஆயிரம் பேரை சந்திப்பதாக சொல்வது, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் என்றே கிசுகிசுக்கிறார்கள். அதாவது தானா வந்த கூட்டம் இல்லை, திரட்டி வந்த கூட்டமாம்.. மொத்தத்தில் எடப்பாடியின் இந்த அதிரடி ஆக்ஷனாது, செங்கோட்டையனை நிஜமாகவே ஆடிப்போக வைத்துவிட்டது..
கட்சியை தன்னுடைய கைக்குள் கொண்டுவர செங்கோட்டையன் முயற்சித்தாலும் அதற்கும் வாய்ப்பில்லை.. காரணம், தன்னுடைய தளபதிகளை எடப்பாடி ஹேண்டில் செய்வதை போல செங்கோட்டையனால் ஹேண்டில் செய்ய முடியாது.. எடப்பாடி அரசியல் அதிரடியானது.. செங்கோட்டையனுடையது மென்மையானது.. செங்கோட்டையன் மீது எடுத்த ஆக்ஷனை, தங்கமணி, வேலுமணி மீது எடப்பாடியால் எடுக்க முடியாது..
அமித்ஷாவுக்கு பதிலடி
தொகுதியில் செல்வாக்குள்ளவர்களை அவ்வளவு சீக்கிரம் தூக்கி எறிந்துவிட முடியாது.. செங்கோட்டையனே டெல்லிக்கு சென்றுதான் புலம்ப வேண்டியிருக்கு.. இந்த பிரச்சனை இன்னும் வலுவாகும்போது, செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே எடப்பாடி பழனிசாமி நீக்குவார் என்றே நம்புகிறேன்..
அதனால்தான், செங்கோட்டையனின் ஆதரவாளர்களையே வளைத்துள்ளார் எடப்பாடி.. எனவே இது செங்கோட்டையனுக்கு தரும் பதிலாக தெரியவில்லை, நேரடியாகவே அமித்ஷாவுக்கு தரும் பதிலடியாகவே உள்ளது..
எடப்பாடிக்கே பிளஸ் பாயிண்ட்
சென்னை வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொன்னாலும், கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி பழனிசாமி இதுவரை உறுதிப்படுத்தவில்லை.. இப்போதும் அதிமுகதான் தனி மெஜாரிட்டி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துவருகிறார்.. அதாவது பிஜேபியை கணக்கிலேயே எடப்பாடி வைக்கவில்லை..
செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுகவாக மாற்றுகிறாரோ இல்லையோ, பாஜக உறவை எடப்பாடி பழனிசாமி உடைத்துவிட்டு விடுவார் என்றே தோன்றுகிறது. எனவே செங்கோட்டையன் எடுத்த முடிவு, எடப்பாடி பழனிசாமிக்குதான் பிளஸ்ஸாக அமையும்.












Click it and Unblock the Notifications