எடப்பாடி கிட்ட ரகசியம் இருக்கா? நான் விட்டால்.. சாக்கடை கிட்ட நின்னு! டென்ஷனான செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கோட்டையனை ஒருமையில் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, "தன்னிடம் நிறைய ரகசியங்கள் இருக்கு. அதை டிவியில் போட்டுவிட்டால் செங்கோட்டையனால் வெளியே நடக்க முடியாது.. மக்கள் காரி துப்பிவிடுவார்கள் என விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள செங்கோட்டையன், "நான் ஆதாரத்தை எடுத்துவிட்டால் தாங்காது. நான் இல்லையென்றால் எடப்பாடி முதல்வராகவே ஆகியிருக்க மாட்டார்" என்று கூறியுள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தவெகவில் இணைந்தார். விஜய் கட்சியில் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sengottaiyan hits back at Admk Edappadi Palaniswami criticism

கடுமையாக விமர்சித்த எடப்பாடி

கோபி செட்டி பாளையம் தொகுதியில் இந்த முறை தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடும் நிலையில், அந்த தொகுதியில் நேற்று அதிமுக வேட்பாளருக்காக பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார். செங்கோட்டையனை ஒருமையில் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, தன்னிடம் நிறைய ரகசியங்கள் இருப்பதாகவும் அதை டிவியில் போட்டுவிட்டால் செங்கோட்டையனால் வெளியே நடக்க முடியாது.. மக்கள் காரி துப்பிவிடுவார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

செங்கோட்டையன் பதிலடி

எடப்பாடி பழனிசாமியின் இந்த கடுமையான குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது கூறியதாவது:- விதிமுறைகள் இருக்கின்றன. நான் கூட கூட்டத்தை நடத்தும் போது அதிகாலை 3.15 மணிக்குதான் அனுமதி கொடுத்தார்கள். அனுமதி கிடைப்பதில் பெரும் சவால் உள்ளது. இதனால், அதற்கு பிறகு ஏற்பாடுகளை செய்ய முடியாத சூழல் உள்ளது.

ரோடு ஷோவை பொறுத்தவரை உங்களுக்கு தெரியும். பேரிகார்டு போட முடியாத நிலை உள்ளது. மற்றவர்களுக்கு அதுபோன்ற நிலை இல்லை. விஜய்யை பொறுத்தவரை அவருக்கு இருக்கும் இடர்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு தெரியும். விஜய்யை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதுதான் மக்களின் உணர்வு. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். விஜய்தான் முதல்வராக வருவார். தவெகவிற்கும் திமுகவுக்கும்தான் போட்டி. அதிமுகவும் திமுகவும் இணைந்து கூட்டுக்கொள்ளை நடத்துகின்றன.

நான் ஆதாரத்தை எடுத்துவிட்டால் தாங்காது

எடப்பாடி பழனிசாமி விமர்சனம் பற்றி கேட்கிறீர்கள். அவர் தோல்வி பயத்தில் குழம்பி போய்விட்டார். அதற்கு மேல் நான் சொல்ல முடியாது. சாக்கடை கிட்ட கல்லை வீசினால் என்ன ஆகும்.. சாக்கடை நம்ம மேல அடிக்கும். குப்பை மேட்டில் இருந்து கிளறிவிட்டால் என்ன ஆகும்.. நாற்றம் எப்படி இருக்கும். அதே மாதிரிதான் உள்ளது எடப்பாடி பழனிசாமியின் பேச்சு. நான் ஆதாரத்தை எடுத்துவிட்டால் தாங்காது. நான் எப்போது வந்தேன்.. அவர் எப்போது வந்தார் என்று எல்லோருக்கும் தெரியும்.

நான் அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. எடப்பாடி மாதிரி நான் எல்லாரையும் ஏமாற்ற மாட்டேன். காலம் அதற்கு பதில் சொல்லும். நிறைய ரகசியம் இருக்கு அதை வெளியே சொல்ல முடியாது. ரகசியம் அது பரம ரகசியம்.. சிதம்பர ரகசியம். ஜெயலலிதா என்னை எப்படி வைத்து இருந்தார் என்று அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமியைத்தான் 2009-ல் ஜெயலலிதா நீக்கிவிட்டார். அதன் பிறகு நான் தான் கூட்டிட்டு போய் வாரியம் போட சொல்லி செய்தேன்..

எடப்பாடி முதல்வர் ஆகியிருக்க மாட்டார்

தமிழ்நாட்டுக்கே தெரியும். எனக்குலாம் அவர் பதவி கொடுத்தார் என்பது தவறு.. நான் முன்மொழியாவிட்டால் எடப்பாடி பழனிசாமியால் எப்படி முதல்வர் ஆகியிருக்க முடியும். என்னுடன் 64 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். நான் முன்மொழியாவிட்டால் எப்படி முதல்வர் ஆகியிருக்க முடியும். எனக்கு பதவி கொடுத்தார் என்பது தோல்வி பயத்தால் குழம்பி போயிருக்கிறார். என்ன செய்வது என்று தடுமாறி கொண்டு இருக்கிறார். அதுதான் நிலை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+