புலிக்கு வாலாக இருக்கலாம்.. ஆனால் எலிக்கு தலையாக இருக்க கூடாது.. செங்கோட்டையன் பற்றி ஜெயக்குமார்!
சென்னை: அண்ணன் செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்தியுள்ளார். புலிக்கு வாலாக இருக்கலாம்.. ஆனால் எலிக்கு தலையாக இருக்க கூடாது என்று கூறிய ஜெயக்குமார், செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் நான் போவேன் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்கு மண்டலத்தின் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தவெகவுக்கு செங்கோட்டையனின் அனுபவம் உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல் விஜய்யுடன் நேரடியாக கலந்தாலோசித்து செயல்படும் வகையில் செங்கோட்டையனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக ஆதரவு வாக்குகளை விஜய் பக்கம் திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூக வாக்குகளை செங்கோட்டையன் மூலமாக தவெக பிரிக்க வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து இன்னும் சிலரையும் தவெக பக்கம் கொண்டு செல்லும் பணிகளில் செங்கோட்டையன் ஈடுபடலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்துள்ளார்.
அதனால் ஒரு கருத்துதான் சொல்ல முடியும்.. எங்கிருந்தாலும் வாழ்க.. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று தகவல் வெளியாகியது. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான்.. நேற்று, இன்று, நாளை.. ஏன் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல..
புலிக்கு வாலாக இருக்கலாம்.. ஆனால் எலிக்கு தலைவனாக இருக்க கூடாது.. இங்கே அதிமுக தான் புலி.. எலி என்று எந்தெந்த கட்சிகளை சொல்கிறேன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். எனது வாழ்நாளில் புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது. நான் திமுகவுக்கோ, தவெகவுக்கோ போக மாட்டேன். அது ஒருநாளும் நடக்காது..
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே எனக்கு பெருமை.. அதிமுக தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
-
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications