செங்கோட்டையன் VSபுஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் யாருடைய பதவி உயர்ந்தது? விஜய்க்கு பின் 2ம் இடம் யாருக்கு?
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு தவெகவின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் வழங்கி உள்ளார். இந்நிலையில் தான் தவெகவில் செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்ட பதவியின் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்க்கு அடுத்தததாக தவெகவில் செங்கோட்டையனின் பதவி பெரியதா? பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்தின் பதவி பெரியதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். 1972ல் எம்ஜிஆர் கட்சி தொடங்கியேபோதே அந்த கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். 9 முறை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர். 1977 ல் முதல் முறையாக அவர் எம்எல்ஏவானார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. ஆனால் தற்போதைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே தான் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.இதையடுத்து நேற்று செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இன்று அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். பனையூரில் உள்ள தவெகவின் கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜயை சந்தித்து, செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தார்.
செங்கோட்டையனுக்கு மொத்தம் 2 பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று தவெகவின் நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி. மற்றொன்று கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் அமைப்பு பொதுச்செயலாளராக செங்கோட்டையன் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள 2 பொறுப்புகளில் பெரிய பதவி என்பது தவெகவின் நிர்வாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி தான்.
இந்நிலையில் தான் அந்த பதவி என்பது என்ன? தவெகவில் விஜய்க்கு அடுத்த இடத்தில் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறாரா? அல்லது செங்கோட்டையன் இருக்கிறாரா? என்பது பற்றிய கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. அதற்கான விடையை இங்கு பார்க்கலாம். செங்கோட்டையனுக்கு, நடிகர் விஜய் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார். அவரது 52 ஆண்டு காலஅரசியல் அனுபவத்தை பயன்படுத்த நடிகர் விஜய் பயன்படுத்தி கொள்ள துடிக்கிறார். இதனால் தான் அவருக்கு தவெகவின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கி உள்ளார்.
தவெகவில் புஸ்ஸி ஆனந்த் உடன் சேர்ந்து செங்கோட்டையன் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் விஜய்க்கு அடுத்ததாக கட்சியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்தின் இடத்தை செங்கோட்டையன் சமன் செய்துள்ளதை பார்க்கலாம். அதோடு பொதுச்செயலாளர், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்களின் வேலை என்பது ஏறக்குறைய ஒன்றாக தான் இருக்கும்.
அதாவது கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் கட்சியின் நிர்வாக மற்றும் அமைப்பு ரீதியான பணிகளுக்குப் பொறுப்பானவர். கட்சியின் அன்றாட நடவடிக்கைகள், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் கொள்கை செயல்பாடு உள்ளிட்டவை சார்ந்த பணிகளை செய்வார். மேலும் கட்சியின் முக்கிய முடிவு, கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும் பொதுச்செயலாளர் முக்கியப் பங்கு வகிப்பார்.
அதேபோல் நிர்வாக தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது தமிழக அரசியலில் புதிதாக உள்ளது. மாறாக இந்த பதவி பல நிறுவனங்களில் உள்ளன. அந்த பொறுப்பில் உள்ளவர்கள் நிறுவன ஊழியர்கள், செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள பொறுப்பானவர். அலுவலக ஊழியர்களை மேற்பார்வையிடுதல், புதிய நியமனம் தொடர்பான அறிவிப்புகளை அறிவித்தல், நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் சார்ந்த விஷயங்களை கையாள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். அதன்படி பார்த்தால் செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு கட்சியின் நிர்வாகக் குழு என்பது குறிப்பிட்ட கட்சியின் மிக உயர்ந்த நிர்வாக அமைப்பாகும். இதுதான் கட்சியின் கொள்கைகளை வகுக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும், கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை நிர்வகிக்கும். அப்படி பார்த்தால் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பதும் கட்சியின் முதன்மையான பதவிகளில் ஒன்று தான்.
இருப்பினும் கூட தவெகவில் பொதுச்செயலாளர் பதவி பெரியதா? நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி பெரியதா? என்பது பற்றி விஜய் கட்சி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மேலும் தற்போதைய நிலவரத்தை வைத்து பார்த்தால் செங்கோட்டையனுக்கு, விஜய் தனக்கு அடுத்ததாக இருக்கும் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான பதவியை வழங்கி உள்ளார் என்பது தான் தவெகவினரின் கருத்தாக உள்ளது.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
செங்கோட்டையன் உறவினருக்கு எல்லாம் சீட் இல்லை.. கடுகடுத்த எடப்பாடி.. அப்செட்டில் அதிமுக எம்எல்ஏ -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன?











Click it and Unblock the Notifications