கி.வீரமணி, உதயநிதி, ஆ.ராசா கைது செய்யலை.. ஆர்பிவிஎஸ் மணியன் மட்டும் சிறையிலா? எச்.ராஜா திடீர் ஆவேசம்
சென்னை: பகவான் கண்ணனை பற்றி எழுதிய கி.வீரமணி, சநாதனத்தை ஒழிப்போம் என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்யாமல் ஆன்மீக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டுள்ளார் என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் மாநில தலைவரும் ஆன்மீக பேச்சாளருமான ஆர்பிவிஎஸ் மணியன் அம்பேத்கர், தலித்துகளை மிக இழிவாக ஒருமையில் பேசினார். அவர் தமது பேச்சில், அம்பேத்கர்தான் கான்ஸ்டிடியூசனை கொடுத்தார்னு பல பேரு எழுதிகிட்டு இருக்கானுக.. பேசிகிட்டு இருக்கானுக.. இப்ப இருக்கிற ஆட்சிக்காரனும் இதையே சொல்லிகிட்டு இருக்கானுங்க..துதி பாடிகிட்டு இருக்கானுக.. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக என பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பேச்சுக்காக ஆர்பிவிஎஸ் மணியன் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் பாய்ந்தன. தற்போது ஆர்பிவிஎஸ் மணியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர்பிவிஎஸ் மணியன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உள்அரங்கு கூட்டத்தில் பேசியதாக 77 வயது முதியவர், சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு உள்ளவர் என்று பாராமால் 14/09 அதிகாலை 3 மணிக்குஆன்மீக பேச்சாளர் RBVS மணியன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி பேசிய இழிபிறவி மீது நடவடிக்கை என்ன? ஆண்டாளை பற்றி அவதூறு வைரமுத்து கைது செய்யப்படவில்லை; பகவான் கண்ணனை பற்றி இழித்து விடுதலை நாளிதழில் எழுதிய கி.வீரமணி சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்; சநாதனத்தை ஒழித்தே தீருவோம் என பேசிய உதயநிதி கைது செய்யப்படவில்லை; எய்ட்ஸோடு சநாதனத்தை ஒப்பிட்டு இழிவு படுத்தி பேசிய ஆ.ராசா வை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications