ஆச்சரியம்.. இந்திய அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மூத்த குடிமக்களுக்கான செம திட்டம்.. எவ்ளோ வட்டி தெரியுமா
சென்னை: இந்திய அஞ்சலக திட்டத்தில் உள்ள சிறப்பான மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது
வயோதிகத்தில் ஏற்படும் பெரிய பிரச்சனையே வழக்கமான வருமானம்தான்... எனவே, ஓய்வுபெறும்போது பெறப்படும் தொகையை, சரியான இடத்தில் முதலீடு செய்தால், மூத்த குடிமக்கள் நிம்மதியாக இருக்கலாம்.. பாதுகாப்பாகவும் உணரலாம்.. அதிக வட்டியையும் பெறலாம்.
இப்படி நிறைய வட்டி தரக்கூடிய எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன.. அதில் ஒன்றுதான், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டமானது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது வேறு எந்த சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி விகிதத்தை வழங்கக்கூடியது.

யார் யார் கணக்கு தொடங்கலாம்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது... விஆர்எஸ் என்று சொல்லப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்... அதேபோல சூப்பர்ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றுக்கொண்ட நபர்களும் இந்த திட்டத்தை துவங்கலாம்.
இப்போது இந்த திட்டத்தில் 8 சதவீத வட்டி கிடைக்கும். நீங்கள் விரும்பினால், இந்த திட்டத்தின் மூலம் 5 வருடங்களில், 6 லட்சம் ரூபாயை வட்டியில் இருந்து மட்டுமே சம்பாதிக்க முடியும்..
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை (எஸ்சிஎஸ்எஸ்) திறப்பது எப்படி?: எஸ்சிஎஸ்எஸ் கணக்கினைத் தொடங்க மூத்த குடிமக்கள் எதேனும் வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், தொகை 1000 மடங்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம். இந்த கணக்கில் ஒரு முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும். காலாண்டு அடிப்படையில் வைப்பு தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது.
கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 வருடங்களுக்கு பிறகு வைப்புத் தொகை முதிர்ச்சியடைகிறது.. கணக்கில் இருந்து பணத்தை அடிக்கடி எடுக்க முடியாது. ஆனால், ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்படுவதன் மூலமாக கணக்கை முன்கூட்டியே நிறைவு செய்யலாம்.
வட்டித்தொகை: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், 8 சதவீத வட்டி கிடைக்கும்.. அதாவது, SCSS கால்குலேட்டரின்படி, 5 வருடங்களில் நீங்கள் 6,00,000 ரூபாய் வட்டியாக 15 லட்சத்திற்கு மட்டுமே பெறுவீர்கள். இந்தத் தொகையை வட்டியாக எடுத்துக்கொண்டு உங்களுக்காக வழக்கமான வருமானத்தை ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

மேலும், இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவடைந்த பிறகு மறுபடியும் 3 வருட காலங்கள் வரைக்கும் நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் மூலமாக இந்திய வரிச் சட்டம் 1961 பிரிவின் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரைக்கும் முதலீட்டாளர்கள் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்வம்: இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான எஸ்சிஎஸ்எஸ் திட்டமானது பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டமாக கருதப்படுவதால்தான், இதில் பெரும்பாலானவர்கள் டெபாசிட் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications