சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

36 மாதங்களாக எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம்- ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: 36 மாதங்களாக எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:

யாருக்காக இந்த பட்ஜெட் என்பது பற்றிய விவாதத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் மொத்த செல்வத்தில் 73% யார் கைகளில் உள்ளது? 1% மக்களின் கைகளில் உள்ளது. அவர்களுக்கும் அவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அளித்த கடன் தள்ளுபடி ரூ 2,38,000 கோடி, வரிச்சலுகை ரூ 1,45,000 கோடி. இவை போதுமே!

Senior Cong. leader P.Chidambaram slams Union Budget

இப்பொழுது அறிவித்துள்ள பட்ஜெட் யாருக்கு உதவிகளும் சலுகைகளும் தந்திருக்க வேண்டும்? விவசாயிகள், குத்தகை விவசாயிகள், தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், உழைக்கும் வர்க்கம், நடுத்தர வர்க்க மக்கள் ஆகியோருக்கு அல்லவா உதவிக் கரம் நீட்டியிருக்க வேண்டும்?

36 மாதங்களாக மேற்கண்ட எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம்.

இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

English summary
Senior Congress leader and Former Union Minister P Chidambaram slammed the Union Budget 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X