Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நல்லாருக்காரு நல்லகண்ணு.. சளிதான் இருக்கு.. நைட்டை விட இப்போ பரவாயில்லை".. குடும்பத்தினர் தகவல்

மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ரசம் சாதம் சாப்பிட்டாரு.. சளி மட்டும் இருக்கு.. ஆனா கொரோனாவெல்லாம் கிடையாது.. இப்போ நல்லா இருக்காரு" என்று நல்லகண்ணு குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    China Corona Vaccine : டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் | Oneindia Tamil

    கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலும் எல்லா தரப்பு அரசியல் கட்சி தலைவர்களால் விரும்பப்படுபவர் நல்லகண்ணு.. எதிரிகள் என்பதே இவருக்கு இந்த நொடி வரை கிடையாது.. ஒரு சின்ன குறையும், கறையும் இல்லாமல் துடிப்புடன் கட்சி பணியில் ஈடுபட்டு கொண்டு இருப்பவர்.

    அது மட்டுமில்லை.. எப்பவுமே வீட்டிலும் சுறுசுறுப்பாக இருப்பவர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு.. அந்த காலத்து திடகாத்திரமான உடம்பு.. பழுத்த போராளி.. சிறையில் பட்ட தழும்புகளும், ரணங்களின் வலிகளும் அவரை உடல், மன ரீதியாகவே பக்குவப்படுத்தி வந்துள்ளது.

     பதில்

    பதில்

    இப்போது 95 வயசாகிறது.. அவராகவே எழுந்து நடமாடுவார்.. போன் செய்தாலும் அவரேதான் அதை ஆன் செய்து எடுத்து பேசுவார்.. நாம் என்ன பேசினாலும் அதற்கு தெளிவாகவும் அதே சமயத்தில் கருத்தியல் ரீதியாகவும் பதில் சொல்வார்.. எப்போதுமே ஒரு மென்மை பேச்சு இருக்கும். இவ்வளவு நாள் அதாவது கடந்த 5 மாசமாக வீட்டில்தான் இருந்துள்ளார்.. சுதந்திர தினத்துக்கு கொடியேற்றுவது உட்பட ஒன்றிரண்டு நிகழ்ச்சிக்கு மட்டும்தான் வெளியில் சென்று வந்திருக்கிறார்.. அதுவும் முழு பாதுகாப்புடன்!

    சாப்பாடு

    சாப்பாடு

    நேற்று மதியம்கூட ரசம் சாதம் சாப்பிட்டுள்ளார்.. இன்று காலை வளசரவாக்கத்தில் ஒரு தோழரின் வீட்டு கல்யாணத்துக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்திருக்கிறார்.. நைட்தான் திடீரென ஜுரம் வந்துள்ளது.. சளி ஏற்கனவே இருக்கவும், ஜுரம் அதிகமாகிவிட்டது.

     திடீர் காய்ச்சல்

    திடீர் காய்ச்சல்

    அதனால், உடனடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் அச்சப்படும்படி எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரனும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் இதை தெளிவுபடுத்தி உள்ளார்.

     நல்லா இருக்கார்

    நல்லா இருக்கார்

    எனினும், நல்லகண்ணு எப்படி இருக்கிறார் என்று குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு முன்பு போனில் பேசி விசாரித்தோம்.. "ஒன்னும் பயப்படும்படி இல்லை.. டெஸ்ட் எடுத்து பார்த்தாங்க.. அதில் கொரோனா இல்லை.. ஆனா சளி நிறைய இருக்கு.. அதுக்குதான் இன்னொரு டெஸ்ட் எடுத்திருக்காங்க.. சாயங்காலம் அந்த ரிப்போர்ட் வரும்.. இப்போ காய்ச்சல் குறைஞ்சிருக்கு.. நைட் விட இப்போ நல்லாவே இருக்காரு" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர். அதனால் நல்லகண்ணு விரைவில் வீடு திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+