திமுகவில் சீனியர்களை விட ஆ.ராசா கிராஃப் ஏறுமுகம்.. அடுத்த பொதுச்செயலாளர் ரேஸில் முந்துகிறார்?
சென்னை: திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக அணிகளின் பொறுப்பாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவில் வலிமையான அணிகளான இளைஞரணி உள்ளிட்டவைகளின் பொறுப்பாளராக ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ரேஸில் ஆ.ராசா முந்திக் கொண்டிருக்கிறார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
திமுகவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிந்தைய கட்சி சார்ந்த நியமனங்கள் பெரும்பாலும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக பொதுச்செயலாளராக நீண்டகாலமாக பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் மறைந்த பின்னர் அந்த இடத்துக்கு யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர். பாலு மற்றும் கே.என்.நேரு என பலரது பெயரும் அடிபட்டது. ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் பொருளாளராக இருந்த துரைமுருகன் பொதுச்செயலாளரானார்,

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த பதவி யாருக்கு போகும் என்கிற விவாதம் நடந்தது. மகளிருக்கான அந்த கோட்டாவில் இயல்பாகவே மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி நியமிக்கப்பட்டார். இப்படி திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் தொடர்பான விவாதங்கள் வரும் போது தவிர்க்க முடியாத உச்சரிப்பு பெயராக இருப்பது ஆ.ராசா.
திராவிடர் இயக்க கொள்கையாளர்; மத்திய அமைச்சராக இருந்தவர்; இந்தியாவை அதிரவைத்த ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு என்பது பொய்யானது என தவிடுபொடியாக்கியவர்; எந்த கூட்டத்தில் பேசினாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களுக்கு எதிராக அனலைக் கிளப்பக் கூடியவர். அதனாலேயே பாஜகவின் பரம வைரியாக உருவாக்கப்பட்டவர். அவரது எளிமை அணுகுமுறை, மக்கள் மொழியிலான பேச்சு நடை உள்ளிட்டவை அவருக்கான ஆதரவு தளத்தை திமுகவில் கணிசமாகவே உருவாக்கி வைத்திருக்கிறது. பல்வேறு கொள்கை சார்ந்த சர்ச்சைகளில் ஆ.ராசா பெயர் அடிபட்டாலும் அவருக்கு ஒட்டுமொத்த திமுகவும் ஆணித்தரமாகவே ஆதரவு தெரிவித்து நின்று வருகிறது.
அண்மையில் சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் சர்ச்சை வெடித்த போது பாஜக மூர்க்கமாக ஆ.ராசாவை எதிர்த்தது. அப்போது நீலகிரி தொகுதிக்கு போன ஆ.ராசாவுக்கு கோவை முதல் நீலகிரி வரை தொகுதி தொகுதியாக பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. திமுகவில் 2-ம் நிலை தலைவர் ஒருவர் இத்தகைய வரவேற்பையும் ஆதரவையும் பெறுவது என்பது மிகுந்த கவனமும் பெற்றது. பொதுவாக கொள்கைவாதிகள், மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பது குறைவு. ஆனால் கொள்கைவாதியாகவும் மக்கள் ஆதரவு பெற்றவராகவும் ஆ.ராசா திகழ்ந்து வருவது திமுக மீது பற்று கொண்ட திராவிடர் இயக்கத்தினருக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தரக் கூடியது.
இதனை ஆமோதிக்கும் வகையில் அண்மையில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை சுட்டிக்காட்டப்படுகிறது. திமுகவில் அண்மையில் அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்களாக, துணை பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். சீனியர் ஐ.பெரியசாமி விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக வும் அடுத்ததாக பொன்முடி பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அதேநேரத்தில் திமுகவின் மிக முக்கியமான வலிமையான அணிகளான மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை அணிகளின் பொறுப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுகவுக்கும் திராவிட இயக்க கொள்கைக்கும் தொடர்பே இல்லை என்கிற விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் 234 தொகுதிகளிலும் திராவிடர் இயக்க கொள்கை விளக்க பாசறை கூட்டங்களை நடத்தி காட்டினார் இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இப்போது இளைஞரணி உள்ளிட்ட வலிமையான அணிகள், பொறுப்பாளர் என ஆ.ராசா வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திமுகவின் வருங்கால தலைமுறையை பட்டை தீட்டுகிற பெரும் பொறுப்பு ஆ.ராசா வசமாகி இருக்கிறது என பார்க்க வேண்டும் என்கின்றனர் திமுக ஆதரவாளர்கள்.
திமுகவில் இப்படி அடுத்தடுத்து மக்கள் ஆதரவையும் முக்கியத்துவத்துவத்தையும் ஆ.ராசா பெற்று வருவதால் பல்வேறு யூகங்களும் கூட அடிபடத் தொடங்கி இருக்கிறது. தற்போது திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார் ஆ.ராசா. திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகனுக்கு அடுத்ததாக ஆழமான கொள்கைவாதியும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஆ.ராசாவுக்கே அந்த பதவி கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இதனையே திமுக தலைமையின் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன. அப்படி ஆ.ராசா திமுகவின் உச்சபட்ச பதவிக்கு கொண்டுவரப்பட்டால் அது திமுகவின் சமூக நீதி சித்தாந்தத்தின் உன்னதத்தை சொல்லக் கூடியதாகவும் இருக்கும் என்கின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications