ஓபிஎஸ்ஸுடன் பேசிட்டு இருக்காங்க! எடப்பாடிக்கு கல்தா கொடுக்கும் சவுத் மாஜிக்கள்? இவங்களா? பரபர அதிமுக
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் என இருவருமே போட்டிக் போட்டிக் கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருக்கும் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் தேனி தரப்புக்கு தாவ தயாராக இருப்பதாக அவர் தரப்பு ஆதரவு மாவட்ட செயலாளரான பசும்பொன் கூறியுள்ளார்.
தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அதிமுகவுக்கு எழுதிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதியுள்ளார். மத்திய அரசு பொதுச்செயலாளர் என்றே அழைப்பு அனுப்பிய நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிடவில்லை என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதிமுக மோதல்
அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தலைமை தேர்தல் ஆணையத்தின் குறிப்புகளிலும் அதிமுகவை பொறுத்தவரை அதிமுக தலைமை நிர்வாகிகளாக ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர்களே உள்ளனர். பாஜக தலைமையிலான மத்திய அரசும் இருவருக்கும் தொடர்ந்து மாறி மாறி முக்கியத்துவம் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் விலக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி தரப்பு கூறினாலும், ஓபிஎஸ் அதனை பற்றிக் கவலைப்படாமல் நிர்வாகிகள் நியமனம் சட்டப்போராட்டங்கள் என தீவிரம் காட்டி வருகிறார்.

மாஜி அமைச்சர்
இந்நிலையில் அதிமுக எடப்பாடி தரப்பில் இருக்கும் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட செயலாளரான பசும்பொன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்," நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. தொண்டர்கள் ஆதரவு முழுக்க முழுக்க எங்களுக்கே இருக்கிறது.

பசும்பொன்
பணம் கொடுத்து நாங்கள் யாரையும் அழைத்து வருவதில்லை. அவர்களாகவே தன்னெழுச்சியுடன் திரண்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர் நியமனம் நிறைவடைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஊராட்சி செயலாளர்கள் பட்டியல் தயாராகி ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பிறகாக கிளைச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளின் நியமனம் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உண்மையான தொண்டர்கள்
எடப்பாடி தரப்பை போல பல ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கு இங்கே பதவி கிடையாது. கட்சிக்காக கொடிபிடித்த உண்மையான தொண்டனுக்கு பதவி வழங்கிய அழகு பார்த்தவர் ஓ.பன்னீர்செல்வம். முழுக்க முழுக்க உழைப்பவர்களுக்கு மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் மரியாதை தருகிறார். அந்த வகையிலேயே நான் உட்பட பலரும் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறோம். தற்போது முக்கியமான முகம் அறிந்த தலைவர்கள் எடப்பாடி தரப்பில் இருப்பதாக பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது. உண்மை அதுவல்ல .தற்போது நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்.

பதவி வெறி
அவரது பதவி வெறி பணவெறி தான் அதிமுகவை இரண்டாக உடைக்க வைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. தொண்டர்கள் நிச்சயம் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள். அதிமுகவை பொருத்தவரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொண்டர்களோடு தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பணத்துக்காகவும் பதவிக்காகவும் தொண்டர்களிடமிருந்து விலகிச் சென்றிருக்கிறார். அதனை அவர் உணர வேண்டிய காலம் வரும். அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பானது விரைவில் வெளிவர இருக்கிறது. அந்தத் தீர்ப்பு உண்மையான தொண்டர்களான எங்களுக்கு சாதகமாக வரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஓபிஎஸ் தலைமை
அவ்வாறு தீர்ப்பு வரும் போது எடப்பாடியின் கூடாரம் காலியாகி ஓபிஎஸ் தலைமையை ஏற்றுக் கொண்டு பல்வேறு மூத்த முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் வர தயாராக இருக்கிறார்கள். தற்போது கூட பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சொல்லப்போனால் திண்டுக்கல்லில் இருந்து கூட ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஒரு மூத்த முன்னாள் அமைச்சரும் பேசியிருக்கிறார். விரைவில் அவர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இணையாய் இருக்கிறார்கள். நாகரீகம் கருதி அவர்களது பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை.

எல்லாம் சுபம்
ஆனால் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பது மட்டும் உறுதி. இன்னும் சிறிது காலம் தான் எல்லாம் சுபமாக முடிந்து உண்மையான தொண்டர்கள் அதிமுகவை வழிநடத்த போவதும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் உண்மையான தலைமையாக தொடரப்போவதும் உறுதி என கூறினார். இதன் மூலம் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துடன் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது யூகங்களாக கூறப்பட்ட நிலையில், தற்போது அது உறுதியாக இருக்கிறது.
-
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications