சனாதன சர்ச்சை: உதயநிதிக்கு நல்ல புத்தி வர வேண்டி அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டசபையில் தவெக அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என கூறியிருந்த நிலையில் உதயநிதிக்கு நல்ல புத்தி வழங்க வேண்டி கோவையில் உள்ள கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தைனை செய்தார்.

சட்டசபையில் 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.

arjun Sampath udhayanidhi stalin

இந்த நிலையில், உதயநிதிக்கு நல்ல புத்தி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் தோப்புக்கரணம் போட்டு வினோத பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

"அண்ணாதுரையும், துர்கா ஸ்டாலினும் சனாதனத்தை பின்பற்றுபவர்களே"
பிரார்த்தனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டதாவது:

சங்கத் தமிழரின் கொள்கை: சங்க காலத் தமிழர்கள் சனாதன இந்து தர்மத்தையே பின்பற்றினர். சனாதனம் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது.

அண்ணாவின் கொள்கை: 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதுதான் சனாதனத்தின் மையக்கருத்து. இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டவர்தான் மறைந்த முதல்வர் அண்ணாதுரை.

குடும்ப பின்னணி: தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின்கூட சனாதன கொள்கையின்படிதான் வாழ்ந்து வருகிறார்.

விஜய்-க்கு அர்ஜுன் சம்பத் விடுத்த எச்சரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும், பிற கட்சிகள் குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்தார்:

"உதயநிதி தொடர்ந்து இந்து தர்மத்தை விமர்சித்து வருகிறார். தன்னை அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்று காட்டிக் கொள்ளும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், உதயநிதியின் இந்த பேச்சை கண்டித்திருக்க வேண்டும்.

தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலரும் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று வன்மத்துடன் பேசி வருகின்றனர். அவர்களின் இந்த வன்ம அரசியல் போக்குக்கு விஜய் பலியாகிவிடக் கூடாது. இதை தமிழ் மண் ஒருபோதும் மன்னிக்காது.

சனாதனத்தை இழிவுபடுத்துபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+