சசிகலாவிடம் இன்றும் பேசும் மாஜிக்கள்.. ஆனா ‘இதை’ கண்டிப்பா செய்ய மாட்டாங்க! போட்டுடைத்த பாண்டே!
சென்னை: சசிகலா டிடிவி தினகரனிடம் பல முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் பேசி வருகிறார்கள்.. ஒரு ரிங் போனாலே போன எடுத்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறது எனவும், ஆனால் சசிகலாவுக்காக அவர்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள். தங்கள் எதிர்காலத்தை தியாகம் செய்ய அவர்கள் தயாராக இல்லை என மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர்," நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றி வாய்ப்பு அதிமுக - பாஜக கூட்டணிக்கு இருந்தது. ஆனால் நல்ல கூட்டணி வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி நழுவ விட்டு விட்டார்.

ஏன் அப்படி அவர் கூட்டணியை உடைத்தார் என இன்றுவரை தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் நானே அதிமுக பாஜக கூட்டணி வலுவாக இருக்கும் எனக் கூறியிருந்தேன். ஆனால் அவர் இப்படி செய்வது அவரது தனிப்பட்ட முடிவு.
தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக சீனியர்கள் கேள்வியை எடப்பாடி பழனிசாமி முன் முன்வைத்தால் உங்கள் தொகுதிகளில் நீங்கள் ஏன் ஜெயிக்கவில்லை என மாவட்ட செயலாளர்களிடமும் முன்னாள் அமைச்சர்களிடமும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்புவார். அதனால் அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இருக்காது. அதிமுகவை பொருத்தவரை கேபி முனுசாமி பல ஆண்டுகளாகவே இரு அணிகளிலும் மாறி மாறி இருந்திருந்தாலும் அவரால் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
தர்மயுத்தத்தின் போது இருந்த ஆதரவு தற்போது ஓபிஎஸ்க்கு இல்லை. ஆனால் ஒரு சாரார் திமுகவுக்கு மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி உதவுகிறார் என குற்றம் சாட்டுகின்றனர். அந்த வாதத்தை ஏற்க முடியாது. தற்போது வரை சசிகலா விலக்கப்பட்டது சரிதான் என அதிமுகவினரே கூறி வருகின்றனர். ஒருவேளை சசிகலா கட்சிக்குள் வந்தாலும் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி இருக்கிறது.
சசிகலாவை சின்னம்மா சின்னம்மா என்று தான் நிர்வாகிகள் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவரது செல்வாக்கு இருந்தது. ஏன் டிடிவி தினகரன் பல சீனியர்களை பெயரைச் சொல்லி தான் கூப்பிடுவார். அவரை சார் என்று வயது அதிகமாக இருந்தாலும் கூப்பிடுவார்கள். சசிகலா அதிமுகவுக்கு வந்தாலும் என்ன பதவி கிடைக்கும் எந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சசிகலா என்ற சாவியால் அதிமுக என்ற பூட்டை திறக்கவே முடியாது.
ஓபிஎஸ் மிகவும் செல்வாக்காக அதிமுகவில் இருந்தவர் அக்கட்சி சார்பில் முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு விசுவாசமாக இருந்திருந்தால் இன்றும் கட்சியில் இருந்திருக்க முடியும். எதிர் அணிக்கு சென்றதால் தான் அவர் விலக்கப்பட்டார். பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தால் அதிமுகவில் அவருக்கு என நல்லதாக ஒரு இடம் இருந்திருக்கும். திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு பதவி கொடுத்தது போல அவருக்கும் பதவி கிடைத்திருக்கும்.
அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவே ஒரு காலத்தில் நீக்கப்பட்டவர் தான். பிறகு அதிமுகவில் இணைந்தார். ஆனால் எல்லோருமே ஜெயலலிதா கிடையாது. டிடிவி தினகரனை பொறுத்தவரை தனிக் கட்சி ஆரம்பித்து விட்டு தனியாக சென்று விட்டார். அதனால் அவர் அதிமுகவில் மீண்டும் இணைவாரா என்ற கேள்விக்கு இடமில்லை. அதே நேரத்தில் அதிமுகவை பொருத்தவரை தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கு யாருக்குமே இல்லை. அவரை விட செல்வாக்கு பெற்ற நபர்கள் என்று யாரும் கட்சியில் காட்டிவிட முடியாது. உதாரணத்திற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியில் 10 சதவீத ஆதரவு இருக்கிறது என்றால், மற்றவர்களுக்கு 8, 7 என்று தான் இருக்கும்.
எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பு இருந்தும் தவற விட்டுவிட்டார். அது தான் அவர் எடுத்த தவறான முடிவு. அதே நேரத்தில் எல்லா தேர்தல்களிலும் அவர் தொடர் தோல்வியை சந்தித்தார் என சொல்ல முடியாது. 2021 சட்டமன்ற தேர்தலில் 60க்கும் மேற்பட்ட சீட்டுகளை பெற்றிருந்தார். ஒரு தேர்தலில் தோற்றார் என்பதற்காக ஒட்டுமொத்த அரசியலும் போய்விட்டது என சொல்ல முடியாது.
எடப்பாடி பழனிச்சாமியின் வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகரில் நடந்த கூட்டத்தில் சசிகலா மீண்டும் கொண்டுவர வேண்டும் என பல மூத்த முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். ஏன் சிவி சண்முகமே மீண்டும் அவரை கட்சியில் கொண்டு வர வேண்டும் என கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர விருப்பமே இல்லை. இப்போது கூட சசிகலா டிடிவி தினகரனிடம் பல முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் பேசி வருகிறார்கள். ஒரு ரிங் போனாலே போன எடுத்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறது.
ஆனால் சசிகலாவுக்காக அவர்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள். தங்கள் எதிர்காலத்தை தியாகம் செய்ய அவர்கள் தயாராக இல்லை. தற்போது இருக்கும் நிலையில் சசிகலா அதிமுகவுக்கு உள்ளே வர வாய்ப்பில்லை. ஒரு வேலை கட்சியின் மீண்டும் ஒரு உடைப்பு ஏற்பட்டால் அவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதிமுகவில் உடைவதற்கு எதுவுமே இல்லை. தற்போதைய சூழலில் சசிகலா அதிமுகவிற்கு வர வேண்டாம் என்று கூட பலர் நினைக்கிறார்கள். என்னை பொறுத்தவரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி நடந்தாலும் அதிமுக இன்னும் மேலும் மேலும் சிதறி கொண்டே தான் போகும்" என்றார்.
-
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications