கொறடா பதவிக்கு கோல் போட்டு பார்க்கும் கே.பி.முனுசாமி... அணி மாறிய கோபத்தில் ஓபிஎஸ் கோஷ்டி
சென்னை: அதிமுக சட்டசபை கொறடா பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதால் ஈபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளராக கே.பி.முனுசாமி காட்டிக் கொண்டிருப்பது ஓபிஎஸ் கோஷ்டியை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருக்கு முழுவதுமாக துணை நின்றவர் கே.பி.முனுசாமி. ஓபிஎஸ் அணியின் வாய்ஸ் ஆக வலம் வந்தார் கே.பி.எம்.
சசிகலாவுக்கு எதிராக அப்படி ஒரு ஆவேசத்தை எப்போதும் காட்டக் கூடியவராகவும் இருந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைந்தது முதல் கட்சியில் எப்படி மீண்டும் வெளிச்சத்துக்கு வருவது என்பதில்தான் படுதீவிரமாக இருந்து வந்தார் முனுசாமி.

ஏறுமுகத்தில் கேபிஎம்
இதனால் இயல்பாகவே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக உருமாறினார். இதனாலேயே ராஜ்யசபா எம்.பி. பதவியும் கிடைத்தது. சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற்றார்.

கொறடா பதவி
இதனையடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கே.பி.முனுசாமி, மாநில அரசியல்தான் இனி முடிவுக்கு வந்தார். இதன் ஒரு கட்டமாகவே சட்டசபை கொறடா பதவியை குறிவைத்து காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

ஓபிஎஸ் அணி அப்செட்
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதிக் கொண்டனர். அப்போது ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கே.பி.எம். பேசவில்லை. அதற்கு மாறாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே சமாதானப் புறாவாகவே பேச்சுவார்த்தை நடத்தினார் கே.பி.எம். இதனை ஓபிஎஸ் தரப்பு ரசிக்கவில்லை.

கேபி முனுசாமி எதிர்ப்பு
இந்நிலையில் சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டு வந்தே தீருவது என திரைமறைவு லாபியில் படுதீவிரமாக உள்ளது ஓபிஎஸ் அணி. சசிகலாவின் அண்மைய ஆடியோ கூட இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் இருந்தது. ஆனால் இதனை மிக கடுமையாக எதிர்த்த கேபிஎம், சசிகலா பேச்சை எந்த ஒரு அதிமுக தொண்டனும் கேட்கப் போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

ஓபிஎஸ் அனி குமுறல்
கே.பி.முனுசாமி இப்படி எல்லாம் பேசுவதே, சட்டசபை கொறடா பதவியை குறிவைத்துதான். ஓபிஎஸ் தர்மயுத்தத்தின் மூலம் மீண்டும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்து இப்போது ஓபிஎஸ் எதிர்ப்பு அரசியலை பகிரங்கமாக கையில் எடுத்திருக்கிறாரே கேபிஎம் என குமுறுகிறதாம் ஓபிஎஸ் கோஷ்டி.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications