அவ்வளவு சொல்லியும் அதிமுக அலுவலகத்திலேயே.. ஆப்சென்ட் ஆன மூத்த "தலை"கள்.. அதிர்ச்சியில் எடப்பாடி!
சென்னை: எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் தனது பலத்தை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், மூத்த தலைவர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வருகிறது. தலைமை பொறுப்பில் யார் இருக்க வேண்டும் என்பது குறித்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே மோதல் உள்ளது.
கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் தொடர்ந்து கூறினாலும், அதைத் திட்டவட்டமாக மறுக்கும் எடப்பாடி ஒற்றை தலைமையே ஒரே தீர்வு என்பதில் மிக உறுதியாக உள்ளார்.

அதிமுக
இந்தப் பிரச்சினை எல்லாம் கடந்த மே மாதம் தொடங்கியது. அதுவரை ஓபிஎஸ்- எடப்பாடி என இரட்டை தலைமை கீழ் தான் கட்சி இயங்கி வந்தது. இருப்பினும், இரட்டை தலைமை கீழ் கட்சி எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை. மக்களவை தேர்தல், தொடங்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரை தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்தது. அப்போதே இரு தரப்பிற்கும் இடையே புகைச்சல் இருந்த போதும், அது வெளிப்படையாகத் தெரியவில்லை,

ஒற்றை தலைமை
இந்தச் சூழலில் தான் ஒற்றை தலைமை எனப் பேச்சு எழ, பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இதையடுத்து நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். ஓபிஎஸ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கிலும் எடப்பாடிக்குச் சாதகமான தீர்பையே சென்னை ஐகோர்ட் அளித்து உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதனால் உற்சாகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் தனது செல்வாக்கைக் கட்சிக்குள் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வப்போது கட்சியினரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முக்கிய கருத்துகளைக் கூறி வருகிறார். சமீபத்தில் கூட கட்சியைப் பிளவுபடுத்த முடியாது என்ற குறிப்பிட்ட அவர், ஆட்சியில் இருந்த போதில் இருந்து கட்சியைக் காப்பாற்றப் போராடுவதாகத் தெரிவித்து இருந்தார்.

தலைமை அலுவலகம்
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று இருந்தார். முன்பு பொதுக்குழு நடைபெற்ற போது, ஓபிஎஸ் அங்குச் செல்லாமல் அதிமுக தலைமை அலுவலகம் சென்று இருந்தார். அப்போது அவர் கட்சியில் இருந்து சில முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றதாகப் பரபர புகாரை எடப்பாடி தரப்பினர் முன்வைத்து இருந்தார். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் எடப்பாடி முதல்முறையாகக் கட்சித் தலைமை அலுவலகத்திற்குச் சென்று இருந்தார்.

அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி 8ஆம் தேதி காலை 10.30க்கு கட்சி அலுவலகம் வருவதாக முன் கூட்டியே அதிமுக நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்சி முழுவதும் தனது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதைக் காட்ட அனைத்து மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கட்சி தலைமையகத்திற்கு வர வேண்டும் என்று விரும்பியே இப்படியொரு அறிவிப்பை எடப்பாடி வெளியிட்டு இருந்தார்.

புறக்கணிப்பு
மூத்த நிர்வாகிகள் பலரும் அங்கு ஆஜராகி இருந்தாலும் கூட சில முக்கிய தலைகள் மிஸ்ஸாகி இருந்தது. குறிப்பாக சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், வளர்மதி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் எடப்பாடி வருகையின் போது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடிக்கு கட்சியில் ஆதரவு இருப்பதாகச் சொல்வது பொய் என்று ஓபிஎஸ் தரப்பு கூறி வரும் நிலையில், இவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மூத்த தலைவர்கள்
அதேபோல எடப்பாடி தலைமை அலுவலகம் வந்த போது அங்கிருந்த மூத்த தலைவர்கள் யாருக்கும் எடப்பாடி அருகே மேடையில் இடம் தரப்படவில்லை. கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் போன்ற சீனியர் தலைகளும் எதிரே தான் சேரில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். இதனால் அங்குச் சென்ற மூத்த நிர்வாகிகளே அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம்












Click it and Unblock the Notifications