கொடைக்கானலில் முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் + செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பு.. ஆலோசித்தது என்ன?
திண்டுக்கல்: கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு ஆகியோர் சந்தித்து பேசினர். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பானது நடந்தது. தேர்தல் வெற்றி வாய்ப்புகள் மற்றும் அமைச்சரவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இருந்ததாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. இதற்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வருகிறார்.

தனியார் நட்சத்திர விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியுள்ள முதல்வர் ஸ்டாலினை நேற்று அமைச்சர்கள் திடீரென சந்தித்து பேசினர். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இதற்கு பிறகு அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி, பழனி எம்எல்ஏ, செந்தில்குமார் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது, தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல்வேறு முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அமைச்சரவை குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதாவது:
'வீட்டு வசதி வாரியத்தில், வீடு ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கதுறை தொடர்ந்த வழக்கில், இதுபொய்யான வழக்கு, எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் நீதி வென்றது. திமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்" என்று கூறினார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications