நேஷனல் லெவல்ல மாறுதே.. செந்தில் பாலாஜிக்கு ஷாக் தந்த உச்ச நீதிமன்றம்.. அமலாக்கத்துறைக்கு வந்த "பவர்"
சென்னை; அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது அவருக்கு மட்டுமின்றி தேசிய அளவில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஹேபியஸ் கார்பஸ் என்பது ஆட்கொணர்வு மனு ஆகும். பொதுவாக போலீசார் அல்லது விசாரணை அமைப்புகள் ஒருவரை காரணம் இன்றி கைது செய்து இருந்தால் அவரை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட முடியும். இதற்கான கோரிக்கையை வைக்கும் மனுதான் ஹேபியஸ் கார்பஸ். இந்த மனுவை தாக்கல் செய்யும் பட்சத்தில் போலீஸ் ஒருவரை விசாரணைக்காக சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து இருந்தால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி இருக்கும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்படி என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
அதாவது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை முறையின்றி கைது செய்து இருப்பதாக அவரின் மனைவி மனுதாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவரின் வழக்கு விசாரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் முதலில் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்கில் தனி தனி தீர்ப்பு வழங்கினர். இதனால் மூன்றாவது நீதிபதி சி கார்த்திகேயன் முன் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அதன் முடிவில் செந்தில் பாலாஜி கைது சரியானதே.. இதை சட்ட விரோதம் என்று கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது. இதனால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் உடனடியாக செந்தில் பாலாஜி மனைவி சார்பாக ஆட்கொணர்வு மனுவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இந்த உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கடந்த ஒன்றரை வாரமாக தீவிரமாக விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.
நீதிமன்ற காவலுக்கு போன பின் அது எப்படி சட்ட விரோத கைதாக இருக்கும். நீதிமன்ற காவல் என்பது ஒரு கைதை அதிகாரபூர்வமாக்கிவிடுகிறது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது தவறு என்று சொல்ல முடியாது. அதோடு அவருக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவும் செல்லாது.
இதனால் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை இன்றி கூறி செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறை காவலில் அவரை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருத கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தேசிய அளவில் மாற்றம்: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது அவருக்கு மட்டுமின்றி தேசிய அளவில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பின்வரும் சக்திகள் அமலாக்கத்துறைக்கு இருப்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
1. அமலாக்கத்துறை கைது சரியானதே. செந்தில் பாலாஜி என்று இல்லை இனி இந்தியாவில் யாரும் இதே முறையில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்ய முடியும்.
2. நீதிமன்ற காவலில் எடுத்த பின் அமலாக்கத்துறை மீண்டும் காவல் கேட்க முடியும். இன்றைய தீர்ப்பில் இது உறுதியாகி உள்ளது.
3. நீதிமன்ற காவல் அல்லது கஸ்டடி கொடுத்த பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது. அது பயனற்றது.
4. அமலாக்கத்துறை போலீஸ் அல்ல, அவர்கள் விசாரணை காவல் கோர முடியாது என்ற வாதம் அடிபட்டு போய்விட்டது.
5. அமலாக்கத்துறை கைதுக்கு முன் உள்ள ஆவணங்களை மட்டும் வைத்தே கைது செய்ய முடியும். அதன்பின் விசாரணை கைதியாக கஸ்டடி எடுத்து ஆவணங்களை திரட்ட முடியாது என்ற வாதம் அடிபட்டு போய்விட்டது. இதனால் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேசிய அளவில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications