கைதாகும் நேரு? 15 எம்எல்ஏக்களுடன் தாய் கழகத்திற்கு திரும்பும் செந்தில் பாலாஜி? திருச்சி சூர்யா தகவல்
சென்னை: செந்தில் பாலாஜி கொள்கைவாதி எல்லாம் இல்லை. செந்தில் பாலாஜி திமுகவின் 15 அமைச்சர்களுடன் தாய் கழகத்திற்கு கூட செல்வார். அதாவது அதிமுகவிற்கு கூட செல்ல தயார், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், செந்தில் பாலாஜி அப்ரூவர் ஆகிவிட்டார். சமீபத்தில் டெல்லி போனார்.. அவர் அப்ரூவர் ஆகத்தான் போனார். டாஸ்மாக் ரெய்டு நடந்த பின்பே அவர் டெல்லிக்கு சென்றார். வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லவே அவர் டெல்லி போனார். தைரியமாக இருங்கள் என்று செந்தில் பாலாஜியிடம் ஸ்டாலின் சொன்னார். ஆனால் அதை செந்தில் பாலாஜி கேட்கவில்லை. டெல்லியிடம் ஒரு முக்கியமான ஆள் வழியாக செந்தில் பாலாஜி பேசுகிறார்.
அதானி வழியாகவே செந்தில் பாலாஜி டெல்லியிடம் பேசுகிறார். அதானிதான் செந்தில் பாலாஜியின் லாபி. அதனால் அவருக்கு இனி சிக்கல் இல்லை. அதானி வழியாக போனால் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது. செந்தில் பாலாஜியும் அதானியும் ஒன்றாக இருக்கிறார்கள். அதானி உடன் செந்தில் பாலாஜி நெருக்கமாகி இருக்கிறார். அண்ணாமலை கை ஓங்கி இருந்தவரை செந்தில் பாலாஜி சிறையில்தான் இருந்தார்.

ஏனென்றால் அண்ணாமலைக்கு அதானி - செந்தில் பாலாஜி லாபி தெரியும். அது செயல்படாமல் பார்த்துக்கொண்டார். திமுக கொங்கு மண்டலத்தில் வலிமையாக இல்லை. அதிமுகவினர் பெரும்பாலும் வென்றது எல்லாம் கொங்கு மண்டலத்தில்தான். கொங்கு மண்டலத்தை செந்தில் பாலாஜி கோட்டை போல வைத்து இருக்கிறார். இவர்தான் திமுகவின் வலிமையான ஆள் என்பதில் டெல்லி உறுதியாக இருக்கிறது. அதனால் அவரை அடிக்கிறார்கள்.
இதை டெல்லியிடம் பேசிய செந்தில் பாலாஜி.. நான் மட்டுமா சம்பாதிக்கிறேன் என்று கூறி கே என் நேருவை கைகாட்டி இருக்கிறார். கே என் நேரு திமுகவில் கைதாக போகும் முதல் அமைச்சராக இருக்க போகிறார். அவரை அடுத்து கைது செய்ய போகிறார்கள். அவர் வெயிட்டாக மாட்டி இருக்கிறார். அதனால் மிக விரைவில் நேரு கைதாக இருக்கிறார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பைலில் இதுவும் இருந்திருக்கிறது. அண்ணாமலையிடம் நெருக்கமாக இருந்த அமைச்சர்கள் பட்டியலை கூட எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். இதை எல்லாம் பார்த்துதான் அமித் ஷா ரெய்டு விட்டுள்ளார், செந்தில் பாலாஜி சரண்டர் ஆகிவிட்டார்.
அவருக்கும் நேருவிற்கும் ஆகாது. அவர் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்பவில்லை. ஸ்டாலின் குடும்பத்திற்கு செந்தில் பாலாஜி நெருக்கமானதை நேரு விரும்பவில்லை. செந்தில் பாலாஜி கொள்கைவாதி எல்லாம் இல்லை. செந்தில் பாலாஜி திமுகவின் 15 அமைச்சர்களுடன் தாய் கழகத்திற்கு கூட செல்வார். அதாவது அதிமுகவிற்கு கூட செல்ல தயார், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications