Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் என உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். இன்று டெல்லி பயணத்தை முடித்து சென்னை வந்தார். அப்போது ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி அவரது காலில் விழுந்து வணங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

senthil balaji udhyanidhi stalin supreme court

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு சோதனை மேற்கொண்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி வந்தார். ஆனால் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து வந்தது. இதையடுத்து மீண்டும் மீண்டும் அவர் நீதிமன்றத்தை நாடியும் ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. இறுதியாக நேற்றைய தினம் டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து 471 நாள் சிறை வாசத்துக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். இதனை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள், பிரியாணி வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

செந்தில் பாலாஜி நேற்று சிறையில் இருந்து மாலையில் தான் வெளியே வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லை. பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தார். இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடி, சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

இதையடுத்து இன்று இரவில் முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றனர். அங்கு செந்தில் பாலாஜியும் சென்றிருந்தார். முதல்வர் ஸ்டாலின் வந்தவுடன் செந்தில் பாலாஜி முதல் ஆளாக மஞ்சள் நிற சால்வையை வழங்கி அவரது காலில் விழுந்து வணங்கினார். அதன்பிறகு அவர் முதல்வர் ஸ்டாலின் அருகே செந்தில் பாலாஜி நின்றார். அதன்பிறகு மற்ற அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.

senthil balaji udhyanidhi stalin supreme court

அதன்பிறகு ஸ்டாலின் உடனான சந்திப்பு பற்றி செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். அதில் ‛‛471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!'' என உருக்கமாக கூறியுள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தவுடன் முதல்வர் ஸ்டாலின் அவரை வரவேற்றும், புகழ்ந்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், ‛‛ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.

கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!'' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+