செந்தில் பாலாஜி வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பில் 2 நீதிபதிகள் சொன்னது என்ன? முழுவிபரம்! அடுத்து இதுதான்
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே நிஷா பானு மற்றும் நீதிபதி டி பரத சக்ரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை கூறினர். இந்நிலையில் தான் அவர்கள் கூறிய தீர்ப்பின் முழுவிபரம் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் கடந்த மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பாது அவருக்கு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே நிஷாபானு, டி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறையினருக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரமில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. மாறாக அமலாக்கத்துறை தரப்பில், ‛‛ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் கைது செய்யப்பட்டார். இதில் விதிமீறல் இல்லை. ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு - பரத சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. ‛‛செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்'' என நிஷா பானு தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி, "தள்ளுபடி செய்யக்கூடிய மனு இது. செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஸ்டடியில் இல்லை. சிகிச்சை நாட்களை நீதிமன்றம் காவல் நாட்களாக கருத முடியாது" என்று தீர்ப்பளித்தார்.
2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்ல உள்ளது. இந்நிலையில் தான் இருஅமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முழுவிபரம் வெளியாகி உள்ளது. அதாவது நீதிபதி நிஷாபானு தீர்ப்பில், ‛‛சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டவரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க மட்டுமே கோர முடியும்.
24 மணி நேரத்திற்கு பிறகு அமலாக்கத் துறை எவரையும் தனது காவலில் வைத்திருக்க முடியாது. அதனால் செந்தில்பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது சட்டவிரோதமானது. அதேசமயம் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுத்த நேரத்தில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணக்கு உகந்ததுதான்.
அமலாக்கப்பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் இருப்பதாக கருதக்கூடாது என்கிற மேகலா தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
அதேநேரத்தில் நீதிபதி பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், ‛‛நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. கைது காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளன என்பதால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளும், குற்ற விசாரணை முறைகளும் மீறப்படவில்லை என்பது உறுதியாகிறது.
சிறப்பு சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகள் இல்லாவிட்டால் குற்ற விசாரணை முறை சட்டம் பொருந்தும். அதன்படி, நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கும் 41ஏ பிரிவு பொருந்தாது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முழுமையாக இயந்திரத்தனமாக செயல்பட்டு நீதிமன்ற காவலில் அடைத்து உத்தரவு பிறப்பித்தார் என்பதை ஏற்க முடியாது.
கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கும்வரையில் செந்தில்பாலாஜியிடம் ஒரு நிமிடம் கூட அமலாக்கத்துறை விசாரணை நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை பொறுத்தவரை மின்னனு பணப்பரிவர்த்தனைகள், வெளிநாடு முதலீடுகள் உள்ளிட்டவை நடைபெறுவதால் உண்மையை கண்டறிவதற்கு, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிப்பது அவசியமாகிறது.
அதனால் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டிய பலனை மறக்க முடியாது. மருத்துவமனையில் உள்ள முதல் 15 நாட்களை நீதிமன்ற காவலாக கருத முடியாது, அந்த நாட்களை கழித்துக்கொள்ள வேண்டும். ஜூன் 15ஆம் தேதி மருத்துவ அறிக்கையின் அடிப்படயில் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில் உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
அதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், அடுத்த நாளே இந்த நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கூறியது நியாயமா முறையா என்ற கேள்வியை என்பதை அமலாக்கத் துறையினரே விட்டுவிடுகிறேன். காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியில் வந்து அங்கேயே சிகிச்சை பெற்றுவருகிறார்.
மேலும் 10 நாட்களுக்கு அங்கேயே சிகிச்சையை தொடரலாம். ஆனால் கூடுதல் நாட்கள் சிகிச்சை தேவைப்பட்டால் சிறை மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவருக்கு சிகிச்சை அளித்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அங்கே சென்று சிகிச்சை வழங்கலாம். மருத்துவ ரீதியாக செந்தில்பாலாஜி தகுதி பெற்றுவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம்.
அப்போது நீதிமன்ற காவல் 15 நாட்கள் முடிந்துவிட்டது என கூறி அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரிக்க கூடாது என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் நீதிபதி நிஷா பானு தீர்ப்பில் இருந்து வேறுபட்டு இருந்தார்.
இவ்வாறு 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இதனால் அடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதி அமர்வுக்கு செல்லும். தற்போதைய தீர்ப்பின் சாராம்சம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்கு போகும். அதன்பிறகு அவர் 3வது நீதிபதியை நியமனம் செய்வார். அவர் கூறும் தீர்ப்பு தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications