ஓட்டுப்பதிவு நாளிலும் சிறை தான்.. செந்தில் பாலாஜி நிலைமையை பார்த்தீங்களா.. நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தனது உடல்நலனை காரணம் காட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமீன் கோரினார்.
ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அவரது நீதிமன்ற காவல் 32 முறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று விசாரணை நடத்திய சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை 33வது முறையாக நீட்டிப்பு செய்தது.
அதாவது ஏப்ரல் 22ம் தேதி வரை செந்தில் பாலாஜியை சிறையிலேயே அடைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளிலும் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications