இன்று மாலை ஜெயிலில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜி.. மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பளித்து உள்ளது உச்ச நீதிமன்றம். இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவார் என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். 471 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வருகிறார் செந்தில் பாலாஜி.
திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். ஜாமீன் கோரி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு அளித்தார்.

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடைபெற்றது. அமலாக்கத்துறையில் சார்பில் வாதாடிய சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழக்குப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு. செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்பது உள்ளிட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட காலமாக வெறும் விசாரணை கைதியாகவே இருப்பதனால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 25 லட்சத்துக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரான என்.ஆர் இளங்கோ.

செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "15 மாதங்களுக்கும் மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தனி மனித அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் ஜாமீன் வழங்காமல் இருப்பதை உச்ச நீதிமன்றம் சமீப காலமாகவே தொடர்ந்து கண்டித்து வருகிறது.
முதன்மை வழக்குகள் விசாரணை முடிந்து, அதன்பிறகு பணப் பரிமாற்ற மோசடி வழக்கை விசாரித்து முடிக்க நீண்ட காலமாகும், அது வரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வருவார் செந்தில் பாலாஜி.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொடுத்து, 2 நபர்கள் ரூபாய் 25 லட்சத்துக்கான ஜாமீன் அளித்து, அதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கும். அவர் அமைச்சராக நியமிக்கப்பட எந்தவிதமான சட்டப்பூர்வ தடையும் இல்லை." என என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications