இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை அருகே சித்தா மருத்துவப் பல்கலைக்கழகம்: அமைச்சர் மா.சு அறிவிப்பு
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாகச் சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் அறிவித்துள்ளார்,
தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சட்டசபையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பில், "ரூ 4,280 கோடி ரூபாய் செலவில் வட்டார அளவிலான மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தின் பழமையான மருத்துவ முறையான சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாகச் சித்த மருத்துவமனைக்குத் தனியாகச் சென்னைக்கு அருகில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.
முதல்வர் தொடங்கி வைத்த 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் ரூ 258 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கப்படும். 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மாற்றப்படும்" என்று அவர் அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications