போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் இருக்கா.. உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்கா.. இதை எல்லாம் உடனே செய்யுங்க!
சென்னை: தபால் துறையில் செல்வமகள் உள்பட சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் இணைப்பது, எஸ்பிஐ,டிமேட் கணக்கு, 2000 நோட்டு உள்பட பல்வேறு விஷயங்களுக்கு செப்டம்பர் 30ம் தேதி தான் இறுதி நாளாகும். இது தொடர்பாக பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட தகவல்களை பார்ப்போம்.
"செப்டம்பர் மாதத்துக்கான முக்கிய காலக்கெடுக்கள்:

1. தபால் அலுவலகம் - சிறு சேமிப்பு:
தபால் அலுவலகங்களில் சிறு சேமிப்பு கணக்கு (செல்வமகள், பொன் மகன், ஆர்டி, முதியோர் சேமிப்பு என எந்த சிறுசேமிப்பு கணக்கும்) வைத்திருப்போர் அனைவரும் செப்டம்பர் 30 க்குள் தங்களது ஆதார் எண்ணை தங்களது கணக்கோடு இணைக்க வேண்டும். தவறினால், உங்களுக்கு வட்டி தருவது நிறுத்தப்படும் மற்றும் உங்களால் மேல் முதலீடு எதுவும் செய்ய முடியாது.
2. எஸ்பிஐ வங்கி வி கேர் (SBI We care)
பாரத ஸ்டேட் வங்கி, SBI We care முதலீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீடித்துள்ளது. இந்த முதலீட்டு வாய்ப்பு, மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தற்போதைய வட்டி விகிதம் - 7.50% - 400 நாட்கள்.
3. ஐடிபிஐ அமிர்ட் மகாட்சேவ் எப்டி (IDBI Amrit Mahotsav FD)
வட்டி விகிதங்கள்:
சராசரி குடிமகன், NRE/NROக்களுக்கு - 7.15%
மூத்த குடிமக்கள்: 7.65%
முன்னதாக, முறையை 7.10% மற்றும் 7.60% கொடுக்கப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல், 0.05% வட்டி விகிதத்தில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
4, டிமேட் கணக்கிற்கான நாமினேசன்
உங்களது டீமேட் கணக்கிற்க்கான nomination செய்யவும் அல்லது அதிலிருந்து opt-out செய்வதற்கான உங்களது முடிவை தெரிவிக்க, கால அவகாசத்தை செபி அமைப்பு வரம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்துள்ளது.
5 இலவச ஆதார் கணக்கு அப்டேசன்
ஆதார் கணக்கின் விவரங்களை (demographic Information) அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 14 வரை UIDAI நீடித்துள்ளது. உங்களது ஆதார் கணக்கில் login செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால், இந்த மாறுதல்கள், எந்தவித கட்டணமும் இல்லாமல் செய்யப்படும்.
6, ₹2,000 நோட்டு
ரிசர்வ் வங்கி முன்னர் அறிவித்திருந்தபடி, ₹2,000 நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 முதல் செல்லுபடியாகாது. ஆகையால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், உங்களிடமுள்ள நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள்." என பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications