என்னாது சோகமா? ஜெயில்ல இருந்து வந்தும் ஹேமந்த் திருந்தலை.. 11 பெண்களோட உல்லாசம்.. நடிகை சித்ரா தோழி திடுக்
சென்னை: பொண்டாட்டி செத்த சோகம் எங்காவது ஹேமந்த் முகத்தில் இருக்கா பாருங்கள். இவ்வளவு ஏன் ஜெயில்ல இருந்து வந்ததும் 11 பெண்களோட உல்லாசமாக இருந்திருக்கிறார் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தோழி ரேகா நாயர் பகீர் கிளப்பியுள்ளார்.
சித்ரா மரணித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் தற்கொலையா கொலையா, தற்கொலை என்றால் எதற்காக தற்கொலை, கொலை என்றால் யார் எதற்காக என்பது குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
ஆனால் சித்ராவின் தோழி, ஹேமந்த்தின் நண்பர் உள்ளிட்டோர் சித்ரா மரணம் தொடர்பாக ஊடகங்களுக்கு சில பேட்டிகளை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமந்த் நல்லவனே இல்லை என கூறும் ரேகா நாயர் பல பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

ஹேமந்த்
ஹேமந்த் பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு கொடுத்த நிலையில் தற்போது இந்த விவகாரங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்படுகிறது. இதுகுறித்து ஒரு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ஹேமந்த் உண்மையானவரே கிடையாது. அயோக்கியத்தனம், பிராடு, பொய், பித்தலாட்டம் இதுதான் அவரது குணம். வேலை இல்லை, புகழ் இல்லை, சித்ராவுக்கு எப்படி இவரை பிடித்தது என்பது கூட எனக்கு வியப்பாக இருக்கிறது.

2.45 கோடி ரூபாய்
ஹேமந்திற்கு அவரது நண்பர்கள் ரூ 2.45 கோடி வரை கொடுத்துள்ளார்களாம். அது போல் நகையும் பல சவரன்களை ஏமாற்றி ஹேமந்த் வாங்கியுள்ளாராம். ஜெயிலில் இருந்து வந்தவுடன் ஹேமந்த்திடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அந்த பணத்தையும் நகையையும் திருப்பி கேட்டால் அவர்கள் மிரட்டுகிறார்கள் என்று அர்த்தமா?

போட்டு தள்ளிய ஹேமந்த்
ஹேமந்த் ஏற்கெனவே பலரை போட்டுத் தள்ளியுள்ளார். இன்று இவர் நல்லவர் மாதிரி பேசுகிறார். அதிமுக ஆட்சியில் ஹேமந்திற்கு நண்பர்கள் இருந்தார்கள். பல பிரபல விஜேக்களை காதல் வலையில் வீழ்த்தி கடைசியில் இந்த அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்வார் ஹேமந்த். அவ்வாறு சப்ளை செய்ததற்கு கிடைக்கும் பணத்தில் பப்புக்கு சென்று ஜாலியாக குடிப்பார்.

துக்கமே இல்லையே
ஜெயில்ல இருந்தும் பொண்டாட்டி செத்த துக்கமே முகத்தில் இல்லையே. ஜெயில்ல இருந்து வந்தும் இன்னும் திருந்தலை. அதாவது நாம் மாட்டிக் கொள்வோம் என்ற பயமும் கொஞ்சம் கூட இல்லாமல் ஹேமந்த் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. இந்த தைரியத்தை இவருக்கு யார் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை.

11 பெண்களுடன் உல்லாசம்
ஹேமந்த் ஜெயில்ல இருந்து வெளியே வந்ததும் சித்ராவை அடக்கம் செய்த இடத்திற்குகூட செல்லவில்லை. 11 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்திருக்கிறார். அதுவும் சித்ரா கொடுத்திருந்த காசில்! பெண்களை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடுவது ஹேமந்தின் வழக்கம். சித்ராவிடம் பேசும் போதும் எப்போதும் கட்டி பிடித்தபடிதான் பேசுவார். ஹேமந்த் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என்னிடம் இருக்கிறது. ஆனால் எந்த பெண்ணும் முன் வந்து இவர் பிராடு என சொல்லமாட்டார்கள். இவ்வாறு ரேகா நாயர் பகீர் தகவலை அளித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications