விஜே சித்ரா கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு! ஹேம்நாத் பதிலளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் இருந்து அவருடைய கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவருடைய தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஹேம்நாத் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த,திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி சித்ரா, பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் ஒரு நட்சத்திர விடுதியில் அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் (இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது) மீது புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது நீதிபதி ரேவதி கூறுகையில், சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேம்நாத்தை விடுதலை செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்துதான் சித்ராவின் தந்தை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் சித்ராவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications