செரோ சர்வே முடிவு.. தமிழ்நாட்டில் 70% பேரின் ரத்தத்தில் கொரோனா ஆண்டிபாடி.. எந்த மாவட்டத்தில் அதிகம்?
சென்னை: தமிழ்நாட்டில் மாநில சுகாதாரத்துறை மூலம் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் 70 சதவிகிதம் பேரின் ரத்தத்தில் கொரோனா ஆண்டிபாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட தொடங்கியதில் இருந்து அதன் பரவல் குறித்து அறிவதற்காக செரோ சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பகுதியில் எத்தனை பேரின் ரத்தத்தில் கொரோனா ஆண்டிபாடி இருக்கிறது என்று செய்யும் சோதனை ஆகும் இது.
எத்தனை பேருக்கு கொரோனா வந்துவிட்டு சென்று இருக்கிறது என்று இதன் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். நாடு முழுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாகவும் இந்த சோதனை நடத்தப்படும், மாநில அளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாகவும் இந்த சோதனை நடத்தப்படும்.

எப்படி சோதனை செய்வார்கள்?
செரோ சோதனையில் ஒரு பகுதியில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து அவர்களின் உடம்பில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிப்பாடி இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள்.ஒருவரின் உடலில் இருக்கும் IgM அல்லது IgG ஆண்டிபாடி இருப்பதை வைத்து அவர்களுக்கு கொரோனா வந்துவிட்டு போய் இருக்கலாம் என்று உறுதி செய்யப்படும். பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்து சென்ற பின் 2 வாரத்தில் IgG ஆண்டிபாடி உருவாகும்.

IgG ஆண்டிபாடி
செரோ சர்வேவில் எவ்வளவு IgG ஆண்டிபாடி இருக்கிறது என்றுதான் கண்டுபிடிக்கப்படும். இதை வைத்துதான் முடிவு இறுதி செய்யப்படும். ரத்தத்தில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து குணமாகி இருப்பதாக அர்த்தம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில சுகாதாரத்துறை மூலம் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் 70 சதவிகிதம் பேரின் ரத்தத்தில் ஆண்டிபாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எத்தனை பேர்
இது மாநில அரசு மூலம் நடத்தப்பட்ட சோதனை ஆகும். அதன்படி மொத்தமாக மாநிலம் முழுக்க 827 கொரோனா கிளஸ்டர்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளஸ்டருக்கு 30 பேரிடம் சோதனை செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ரேண்டம் முறையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக எல்லா கிளஸ்டரும் சேர்த்து 24586 பேரிடம் இந்த சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

கிராமம் நகரம்
கிராமம் நகரம் என்று ரேண்டம் முறையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில்தான் செரோ சதவிகிதம் 70 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 24586 பேரில் 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருந்துள்ளது. அதாவது இவர்களுக்கு கொரோனா வந்து சென்று உள்ளது. தமிழ்நாட்டில் அதிகமாக விருதுநகரில் 84 சதவிகிதம் பேருக்கு ஆண்டிபாடி இருந்துள்ளது.

சோதனை
கடந்த ஏப்ரலில் தமிழ்நாட்டில் இந்த சதவிகிதம் 29 ஆக இருந்தது. தற்போது இது 70 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை -ஆகஸ்ட் மாதங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை, தென்காசி, மதுரை, தேனி மாவட்டங்களில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமாக செரோ சதவிகிதம் இருந்துள்ளது. கரூரில் குறைவாக 51 சதவிகிதம் மட்டுமே இருந்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், நீலகிரியில் 50-60க்கு இடையில் செரோ சதவிகிதம் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை
நேற்று மாலை நிலவரப்படி தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 26,74,233 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 16,513 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 26,21,986 பேர் இதில் குணமடைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 35,734 பேர் பலியாகி உள்ளனர். நேற்று புதிதாக 1,390 பேருக்கு கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications