பிரார்த்தனைக்கு வந்த 15 வயது பிஞ்சு.. சீரழித்த பாதிரியார்.. தட்டித் தூக்கிய போலீஸ்!
15 வயது சிறுமிக்கு தொல்லை தந்த பாதிரியாரிடம் விசாரணை நடந்து வருகிறது
சென்னை: பிரபல பின்னணி பாடகியின் மகள் என்றுகூட பார்க்காமல், 15 வயது சிறுமிக்கு டார்ச்சர் தந்தாரே, ஒரு பாதிரியார் ஞாபகம் இருக்கா? அவரை போலீசார் தட்டி தூக்கி உள்ளதுடன், தீவிர விசாரணையையும் நடத்தி வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்தான் அந்த ஃபேமஸ் பாடகி.. இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.. சென்னையில், தனியார் டிவிக்களில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், பிற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பாடகி கலந்துகொண்டு வருகிறார்..
அதனால், அடிக்கடி புரோகிராமுக்கு கிளம்பி சென்றுவிடுவதால், மகளை சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டில் தங்க வைத்துள்ளார்... அந்த குழந்தையும், இந்த 8 வருஷமாகவே சித்தியின் அரவணைப்பிலேயே இருந்து வந்துள்ளது.

உறவினர்கள்
இந்த சித்தியின் கணவர் பெயர் ஜான் ஜெஷில்.. சில சமயங்களில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இவர்களை தவிர, சித்தியின் உறவினர்களான ஷகீனா ஷான், கிளாரோ ஆகியோரும் அந்த குழந்தைக்கு டார்ச்சர் தந்து வந்திருக்கிறார்கள்.. இவர்கள் வாரந்தோறும் குடும்பத்தோடு கீழ்ப்பாக்கம் சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு செல்வது வழக்கமாம்..

பாதிப்பு
அப்படி சிறுமியையும் அங்கே அழைத்து சென்றபோதுதான், அந்த சர்ச் பாதிரியார் ஹென்றியும் தன் பங்குக்கு சிறுமியிடம் வேலையை காட்டி உள்ளார்.. இதனால், கடுமையாக மனரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமி, தன் அம்மாவிடம் நடந்ததை சொல்லவும், அதிர்ந்து போய்விட்டாராம்.. இதில் எல்லாரையும்விட பலமுறை டார்ச்சர் தந்தது அந்த பாதிரியார்தானாம்..

தலைமறைவு
இது சம்பந்தமாக, பாடகி கீழ்ப்பாக்கம் ஸ்டேஷனில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புகார் தந்திருந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், பாதிரியாருடன் சேர்ந்து அந்த 4 பேருமே எஸ்கேப் ஆகிவிட்டனர்.. தலைமறைவாகி இருந்த இவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வந்த நிலையில், பாதிரியார் ஹென்றி, பாடகியின் சகோதரி, அவரது கணவர், உறவினர் ஒருவர் என 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சொத்து பிரச்சனை?
இவர்களிடம் தீவிரமான விசாரணையும் நடந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால், 8 வருஷங்களாகவே சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டு வந்துள்ளதாம்.. இப்போது, புகார் கொடுத்த பாடகியின் தங்கையும் இதில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சொத்து பிரச்சினைக்காகவே தன்னுடைய மருமகள் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக பாடகியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளது, இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications