47 வயசு பெண்ணின் கன்னத்தை.. விரட்டி விரட்டி கடித்த 50 வயசு காமுகர்.. அமைந்தக்கரையில் ஒரு அக்கிரமம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 47 வயது என்றுகூட பார்க்கவில்லையே.. அந்த விதவையின் கன்னத்தை வெறித்தனமாக கடித்துவிட்டார் 50 வயசு இருதயராஜ் .. இவரைதான் போலீசார் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்த பெண் அவர்.. 3 வருடங்களுக்கு முன்பே கணவனை இழந்தவர்.. 47 வயதாகிறது.. 2 மகன்களுடன் வசித்து வந்தார்... இந்த மகன்கள்தான் பெற்ற தாயை கவனித்து கொள்கிறார்கள்.. இருவருமே வேலைக்கு போய்விடுவதால், விதவை பெண் வீட்டில் தனியாகத்தான் இருப்பார்.

Sexual harassment to Widow in Chennai

இந்த நிலையில், மகன்கள் 2 பேருமே வெளியூருக்கு சென்று விட்டனர். இவர்கள் ஊரில் இல்லாததை தெரிந்து கொண்ட எதிர்வீட்டுக்காரர் இருதயராஜ், இரவு 8 மணிக்கு அந்த வீட்டிற்கு வந்தார்.. தலைக்கேறிய போதையுடன், அத்துமீறி நுழைந்தார்.. அந்த பெண்ணையும் கட்டிபிடித்து கன்னத்தை பிடித்து கடித்தார்.. தொடர்ந்து பாலியல் தொல்லையும் தந்தார்.. இதனால் பதறி போன அந்த பெண், அவரது பிடியில் இருந்து விடுபட்டு அலறி கொண்டே வெளியே ஓடிவந்தார்..

ஆனாலும் இருதயராஜ் விடாமல், அவரை துரத்தி கொண்டு வந்து, மடக்கி பிடித்து மறுபடியும் வீட்டுக்குள் இழுத்து சென்று, மறுபடியும் அவரது கன்னத்தை கடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அப்போதுதான் அந்த பெண் அலறி கூச்சல் போடவும், பயந்து போன இருதயராஜ் வீட்டை விட்டு வெளியில் ஓடிவிட்டார்.. இதையடுத்து, வீடு திரும்பிய 2 மகன்களிடம் நடந்ததையெல்லாம் சொல்லி, அந்த பெண் கதறி அழுதார்.. பின்னர், சூளைமேடு போலீசிலும் புகார் தந்தார்..

இருதயராஜ் கடித்ததில், பெண்ணின் கன்னம் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. முகம் முழுவதும் வீங்கிவிட்டது.. அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. இதனிடையே எதிர்வீட்டு இருதயராஜை காணோமாம்.. அவருக்கு 50 வயசாகிறதாம்.. எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.. அவரை சூளைமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+