தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யார் இவர்?
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு நாளை (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தற்போது அவர் பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து, புதிதாக சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 22ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய டிஜிபிக்கான ரேஸில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி (ஊர்க்காவல் படை தலைவர்), சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்ளிட்ட 10 பேர் இருந்தனர்.
இவர்களில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. இந்த 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இவர்களில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினால் டிக் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு காவல்துறையின் 31வது தலைவராக, சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கர் ஜிவால் வகித்து வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி காலியாகும் நிலையில், சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சங்கர் ஜிவால் பற்றி: உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் குமாவுனி மொழியில் புலமை பெற்றவர்.
என்ஜினீயரிங் படித்து முடித்ததும் செய்ல், பெல் நிறுவனங்களில் சிறிது காலம் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். சேலம், மதுரை எஸ்.பி, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
சிறந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர். சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் கடந்த 2021 மே மாதம் முதல் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது இவர் தமிழ்நாடு காவல்துறையின் மிக உயரிய பதவியான டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications