ஞாயிற்றுக்கிழமை அதுவுமா இப்படியா? வாடிக்கையாளருக்கு வந்த புழு பிரியாணி! சேலம் புகழ் கடையில் ‘உவ்வே’
சென்னை : சென்னை அருகே கிழக்கு தாம்பரத்தில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி அருகே அமைந்துள்ள சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில் , மட்டன் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் பிரியாணி பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Recommended Video
தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ், சுசிந்தர்பாலாஜி, கேபா ஆகியோர் சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில் இன்று மதியம் மூன்று மட்டன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர்.
இதில் ஒரு மட்டன் பிரியாணியில் புழு இருந்தது தெரிய வந்துள்ளது இது பற்றி மூவரும் கடை உரிமையாளரிடம் புகார் அளிக்கவே அவர்கள் பணம் கொடுத்து நடந்ததை மறைக்க பார்த்ததாக கூறப்படுகிறது.

பிரியாணியில் புழு
அதற்குள்ளாக அங்கு சாப்பிட வந்த மற்றவர்களுக்கு பிரியாணியில் புழு இருந்த விஷயம் தெரியவே அவர்கள் சாப்பிடாமல் எழுந்து போய்விட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தாம்பரம் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் தரம் இல்லாத உணவு பொருட்கள் வழங்கப்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

தரம் இல்லாத உணவு
சமீபத்தில் குவாலிட்டி என்ற உணவகத்தில் தரம் இல்லாத உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல தனியார் உணவகத்தில் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் மக்களை பீதி அடைய செய்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மட்டுமல்ல இதற்கு முன்னதாகவும் பல புகழ்பெற்ற உணவகங்களில் புழு, கரப்பான் பூச்சி, கெட்டுப் போன இறைச்சி உள்ளிட்டவற்றுடன் பிரியாணி பரிமாறப்பட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக சென்னையில் நடக்கும் ரெய்டுகள் பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைத் தந்துகொண்டிருக்கிறது. சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்தற்காக சென்னையின் பிரபலமான பிரியாணி கடைகளுக்கு சீல வைக்கப்பட்டதோடு, சில உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications