முதலிரவு அறையில் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்த மாப்பிள்ளை.. ஆக்ரா மணப்பெண் தலையில் இறக்கிய இடி
சென்னை: ஆக்ரா ஜகதீஷ்புரம் பகுதியில் முதலிரவு அறையில் மணப்பெண் விடுத்த 90 லட்சம் ரூபாய் மிரட்டலால் மணமகன் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சில மணிநேரங்களிலேயே அரங்கேறிய இந்த நிகழ்வு குறித்து மணமகன் வீட்டார் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் இந்த வினோத சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜகதீஷ்புரத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

2 வீட்டார் சம்மதத்துடன் முறைப்படி நடந்த இந்தத் திருமணத்திற்குப் பிறகு, மணமகன் வீட்டிற்குப் புதுப்பெண் அழைத்து வரப்பட்டார். திருமணச் சடங்குகள் அனைத்தும் இனிதே முடிந்து, அன்றிரவு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போதுதான் இந்த கொடுமை நடந்துள்ளது.
முதலிரவு சம்பவம்
முதலிரவு அறைக்குள் நுழைந்த மணமகன், தனது மனைவி தன்னிடம் கனிவாகப் பேசுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அறைக்குள் வந்த புதுப்பெண், எடுத்தவுடனேயே ஒரு அதிரடி நிபந்தனையை விதித்துள்ளார்.
"எனக்கு இப்போது 90 லட்சம் ரூபாய் ரொக்கமாக வேண்டும். அந்தப் பணத்தைத் தந்தால்தான் முதலிரவு நடக்கும், இல்லையென்றால் எதுவும் நடக்காது" என்று கறாராகக் கூறி மாப்பிள்ளையை அதிர வைத்துள்ளார்.
திடீரெனப் பணம் கேட்டு மிரட்டிய மனைவியின் செயலால் அதிர்ச்சியடைந்த மணமகன், அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே அறையிலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, சத்தம் வெளியே கேட்கத் தொடங்கியது. சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து விசாரித்தபோது, புதுப்பெண் தனது பிடியில் உறுதியாக இருந்தார். உடனே மணப்பெண் தனது வீட்டாருக்கும் தகவல் கொடுத்தார்.
மணமகனை அலறவிட்ட மணப்பெண்
சற்று நேரத்தில் அங்கு வந்த மணப்பெண்ணின் வீட்டார், பெண்ணைச் சமாதானம் செய்வதற்குப் பதிலாக அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதனால் திருமண வீடு கலவர பூமியாக மாறியது. ஆத்திரமடைந்த மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டின் கேஸ் குழாயைத் திறந்துவிட்டு, வீட்டைத் தீவைத்துக் கொளுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாப்பிள்ளை வீட்டாரை அறைக்குள் வைத்துப் பூட்டி மிரட்டல் விடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அந்தப் பெண், தனக்குத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்றும், பணம் மற்றும் நகைகள் தருவதாக ஆசை காட்டியதால்தான் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும் கூறினார்.
மாயமான தங்க நகைகள்
மேலும், முதலிரவு அறையில் ஏற்பட்ட தகராறின் போது, அங்கிருந்த விலையுயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு, தனது குடும்பத்தினருடன் அந்தப் பெண் தப்பியோடிவிட்டார். இதில் மாமியாரின் நகைகளும் திருடு போனதாக மாப்பிள்ளை வீட்டார் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் முதலில் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதால், மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றத்தை நாடினர். அதன் பிறகே தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. திருமணத்தை ஏற்பாடு செய்த புரோக்கரையும் போலீசார் தேடி வருகின்றனர். பணத்திற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் திருமண மோசடி சம்பவம் ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications