ஆள் இல்லா நேரத்தில் கோயம்பேட்டில் ஷாக் சம்பவம்.. பஸ் ஸ்டாண்ட் இப்படி ஆகிடுச்சே! உடம்பே சிலிர்க்குதே
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது. அங்கே போலீஸ் பாதுகாப்பும் இல்லை. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில்.. சமூக விரோதிகளின் இடமாக மாற தொடங்கி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சமூக விரோதிகள், ரவுடியிஸத்தின் இடமாக கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மாற தொடங்கி உள்ளன.
அதன்படி இன்றுதான் சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கஞ்சாவும் விற்பது போலீசார் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து 49 போதை மாத்திரைகள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பட்டாக்கத்தி, ஒரு பட்டன் கத்தி ஐந்து செல்போன்கள், எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
ஆள் இல்லாத நேரத்தில் கொடூரம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அந்த பகுதியில் இடிபாடுகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில் இதற்கான டெண்டர் விடுபடலாம் என்று கூறப்படுகிறது.இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அங்கே ஆள் இல்லாத நேரத்தில் ஆண்கள், பெண்கள் சிலர் அத்துமீறும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஒரு காலத்தில் அங்கே பல லட்சம் பயணிகள் இருந்தனர்.
ஆனால் இப்போது அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் இல்லை. இந்த நிலையில்தான் அதை பயன்படுத்திக்கொண்டு அங்கே ஆண்கள், பெண்கள் சிலர் அத்துமீற தொடங்கி உள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் ரீல்சாக வெளியாகி உள்ளது.
என்ன கட்டுமானம்: இதற்கு இடையே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன.
ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. ஐடி நிறுவனம்; இந்த நிலையில்தான் இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications