புடவை கட்டினால் புற்றுநோய் கன்ஃபார்ம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.. என்னன்னு பாருங்க ஆடிப்போயிருவீங்க
சென்னை: இந்தியாவில் பெண்கள் பெரும்பாலானோர் புடவைகள் அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், புடவை அணியும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புடவைகள் என்றாலே பெண்கள் குஷியாகிவிடுவார்கள். என்னதான் சுடிதார், டாப்ஸ் என்று வாங்கிக் குவித்தாலும் புடவைகள் மேலான கிரேஸ் எப்போதுமே பெண்களுக்கு குறையாது. எந்தவொரு விஷேசங்களானாலும், பண்டிகைகளானாலும் அந்த நிகழ்ச்சி முழுமையடைவதே டிரெண்டியான சேலைகளைக் கட்டுவதில்தான் என்று பல பெண்களும் நினைக்கின்றனர்.

அதேபோல, புடவைகளில் வெரைட்டிகளுக்கும் குறைவிருக்காது. டிரெண்டிங், டிரெடிஷனல், கிளாசிக், மாடர்ன் என பல வெரைட்டிகளில் புடவைகள் கிடைக்கின்றன. கல்யாணி காட்டன் சேலைகள், சாஃப்ட் டிஸ்யூ, பட்டுப் புடவைகள், காட்டன் புடவைகள், ஜார்ஜெட் புடவைகள், கலம்கரி பிரிண்ட், ஆரணி செமி சில்க், பிரைட் சேட்ஸ் ஜார்ஜெட் சாரீஸ்.
ஜூட் சாரிஸ், புட்டா டிசைன் சேலைகள், பிளையின் சேலைகள், எம்பிராய்டரி சாரீஸ், சில்க் சாரீஸ், சாப்ட் சில்க், வர்ணா சில்க் சாரி, குபேரா பட்டுப் புடவைகள், ஃப்ளோரல் புடவை,காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, மென்பட்டு, டிசைனர் சாரீஸ், புட்டா சாரீஸ் என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு வெரைட்டிகளும், டிசைன்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதனால்தான் பெண்கள் புடவைக் கடைக்குச் சென்றாலே அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
இந்த நிலையில், புடவைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், புடவையை இறுக்கமாக கட்டுவதால் பெண்களுக்கு தோல் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம்,வர்தாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் பிகாரில் உள்ள மதுபானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் புடவை அணிவது குறித்து சிறப்பு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பீகார் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச சேர்ந்த இரு பெண்களை மருத்துவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.
இந்த சோதனையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த முடிவில், பெண்கள் புடவை அணியும்போது பாவடையையும் அணிகின்றனர். அப்போது, சேலை கலையாமலும், அவிழ்ந்து விடாமலும் இருப்பதற்காக பாவாடையை மிகவும் இறுக்கமாக அணிகின்றனர். தொடர்ந்து இதுபோல இறுக்கமாக அணிவதன் மூலம் பெண்களுக்கு இடுப்பு பகுதியில் அழற்சி, புண் போன்றவை ஏற்படுகிறது.
இந்த அழற்சி, புண் ஆகியவை ஒருகட்டத்தில் தோல் புற்றுநோய் ஏற்படும் நிலையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications