நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்!
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்படி இருக்கையில், நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு ரூ.20 கோடி விஜய் கடன் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மருத்துவ மாணவி அனிதா, நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டத்தை நடத்தி, மருத்துவ சீட் கிடைக்காததால் உயிரை விட்டிருந்தார். இது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அனிதாவின் மரணத்தில் உடைந்து போயிருந்த அவரது பெற்றோரை சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இது விஜய் மீதான மதிப்பை அதிகரிக்க செய்திருந்தது.

ஆனால், நீட் கோச்சிங் கொடுக்கும் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி விஜய் கடனாக கொடுத்திருப்பதாக, தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதாவது விஜய் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து குறித்து சொல்லியிருந்தபோது, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இப்படி இருந்துக்கொண்டே, மறுபுறம் நீட் தேர்வுக்கு கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு எதற்காக ரூ.20 கோடி கடன் கொடுக்க வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்னறனர்.
அப்படியெனில், நீட் தேர்வை விஜய் மறைமுகமாக ஆதரிக்கிறாரா? அல்லது சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணம் கட்சி நீட் கோச்சிங் பெற வேண்டும் என்று விஜய் விரும்புகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. அப்புறம் எதுங்குங்க அனிதா மரணத்திற்கு விஜய் கண் கலங்கினாரு? என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
இது மட்டுமல்லாது, அவரது பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற தகவல்களும் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன. திரைப்படங்களுக்கு ரூ.200 கோடி வரை விஜய் வருமாணம் ஈட்டியதாக நிர்வாகிகள் கூறியிருந்தனர். ஆனால், விஜய் தனது மொத்த சொத்து மதிப்பை ரூ.400 என்று கணக்கு காட்டியிருக்கிறார். அப்படியெனில், கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வந்த விஜய் என்று சொல்வது பொய்யா? அல்லது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மைக்கு முரணாணவையா? என்று கேள்விகள் எழுகின்றன.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!












Click it and Unblock the Notifications