பப், பார்ட்டி.. லேடி ரோலக்ஸாக உலா வந்த சுந்தரி சீரியல் நடிகை! இன்டர்நெட் காலில் தான் பேசுவாங்களாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போதை பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுந்தரி சீரியல் நடிகையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போதைப்பொருள் விற்றதாகவும், கிடைத்த பணத்தில் பப், பார்ட்டி என உல்லாசமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் போதை பொருள் கும்பலுடன் இன்டர்நெட் காலில் பேசி வந்ததும் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு இளம் பெண்ணை சோதனை செய்தபோது அவரிடம் 5 கிராம் அளவில் மெத்தபெட்டமைன் இருந்தது தெரியவந்தது.

chennai drug crime

2000 ரூபாய்க்கு போதை பொருளை வாங்கி 3000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மீனா என்பதும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வருவதும் தெரிய வந்தது.

அது மட்டுமல்லாமல் ஆர்யா நடித்த டெடி படத்திலும் அவர் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் போதை விற்பனையில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தில் வருவது போல், போதை பொருளை மொத்தமாக வாங்கி வந்து அவற்றை கிராம் கணக்கில் பிரித்து வைப்பது தான் மீனாவின் வேலை என கூறப்படுகிறது.

மேலும், சினிமா தொடர்பு இருப்பதால் நடிகர் நடிகைகளுக்கும் அவர் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் இதற்காகவே தனித்தனியாக அவர் வாட்ஸ் ஆப் குழுக்களையும் நடத்தி வந்திருக்கிறார். மேலும் மீனாவுக்கு கீழ் போதைப்பொருள் விற்பனையில் பலர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. மொத்தமாக போதைப் பொருளை வாங்கி அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விற்றதாக நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மீனாவுக்கு மெத்தபட்டமைன் எப்படி கிடைத்தது? யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் நடிகர்கள், பிரபலங்கள், மேலும் சில சீரியல் நடிகர்கள் சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு போதை பொருள் விற்றுக் கொடுத்தால் 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் எனவும் அதன் மூலம் பார்ட்டிகளில் கலந்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்ததாகவும் கூறியிருக்கிறார் சீரியல் நடிகையான மீனா.

மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து இன்டர்நெட் காலில் மட்டும் தான் பேசுவோம் எனவும் சாதாரண செல்போன் வாட்ஸ் அப்பில் பேசினால் போலீசாரிடம் மாட்டி விடுவோம் என்பதற்காக இன்டர்நெட் காலில் பேசி வந்ததாக கூறினார். நெட் காலில் பேசினாலும் ஐபி அட்ரஸ் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடலாம் என்பதால் பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை மூலம் பேசி வந்ததையும் அவர் உறுதி செய்து இருக்கிறார்.

மதுப்பழக்கம் மட்டும் கொண்டிருந்த அவர், மெத்தமெட்டமைன் போதை பொருள் பயன்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறார். தாமஸ் என்பவர் தான் போதை பொருள் பழக்கத்தை அவருக்கு பழக்கியுள்ளார். தொடர்ந்து தாமஸ் ஆயிரம் ரூபாய்க்கு போதை பொருளை விற்றால் அதனை வாங்கி 3000 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கிறார் எஸ்தர் என்ற மீனா. இந்த நிலையில் தாமசை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+