வாக்குச்சாவடிகளில் வீல் சேர்கள் பற்றாக்குறை.. ஆர்வமுடன் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிப்பதன் அவசியத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்தது. கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் தற்போது மக்களும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து, காலையிலேயே தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகி வரிசையில் காத்திருக்கின்றனர்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளும் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கென பிரத்யேகமாக வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதனையடுத்து முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் பலரும் ஆர்வமுடன் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் குவிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீல் சேர்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான முதியவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்துள்ளனர்.

முதியோர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருப்பதால் கூட்ட நெரிசல் காரணமாக வீல்சேர்கள் போதவில்லை. அதுமட்டுமல்லாமல்
தமிழகத்தில் முதல் முறையாக வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாலும் மக்கள் வாக்களிக்க முடியாமல் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்

சென்னை நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள வாக்குச்சாவடியிலும் ஓட்டுப் பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை. மேலும் வாக்குப் பதிவு இயந்திர கோளாறால் தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு, மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது வாக்காளர்களை சோர்வுற செய்துள்ளது












Click it and Unblock the Notifications