விபரீதம்.. ஸ்தம்பித்து விடும்.. ஓபிஎஸ்ஸுடன் இணைய வேண்டுமா? கோர்டில் எடப்பாடி தரப்பு பரபர பதில்!
Should i join hands with O Panneerselvam? Edappadi Palanisamy answers in MHC. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு வழக்கை விசாரணை செய்து வருகிறது. இதனால் இன்றே இரண்டு தரப்பும் இறுதி வாதங்களை வைக்கும். இரண்டு தரப்பிற்கும் தலா 1 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில், தனி நீதிபதி தீர்ப்பால் அதிமுக முடங்கி உள்ளது. கட்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. கட்சி செயல்பாடுகள் இந்த தீர்ப்பு காரணமாக முடங்கி உள்ளது. பொதுக்குழுவை பின்பற்ற வேண்டும். பொதுக்குழு முடிவுதான் அதிமுகவில் முக்கியம். பொதுக்குழுவிற்கு கட்டுப்பட்டுதான் அடிப்படை உறுப்பினர்கள் செயல்பட முடியும். ஆனால் தனி நீதிபதியோ அடிப்படை உறுப்பினர்களை கேட்டு முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறி உள்ளார்.

தனி நீதிபதி
இந்த வாதத்திற்காகவே தனி நீதிபதியின் தீர்ப்பு தவறு என்று உத்தரவிடலாம். கட்சி விதிகளின்படி பொதுக்குழு மட்டுமே முடிவுகளை எடுக்க முடியும். எனவே நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க முடியாது. அவர்களுக்கான அதிகாரம் எதுவும் இல்லை. அதை பற்றி கட்சி விதிகளில் எதுவும் இல்லை. பொதுக்குழு மட்டுமே முடிவு எடுக்க முடியும்.

பொதுக்குழு
பொதுக்குழுவிற்கு ஏன் அடிப்படை உறுப்பினர்களை அழைக்கவில்லை என்று கேட்டுள்ளார். அப்படி அடிப்படை உறுப்பினர்களை அழைக்க வேண்டும் என்று கட்சி விதி சொல்லவில்லை. அதோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதி கூறி இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் உடன் நாங்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்பே இல்லை. அது கட்சி நடவடிக்கைகளை பாதிக்கும்.

இணைய மாட்டோம்
நாங்கள் இணைய மாட்டோம். அப்படி நடந்தால் கட்சியே ஸ்தம்பித்துவிடும். இதன் காரணமாக கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதியின் தீர்ப்பே விபரீதமான முடிவு. அதனால் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்து. இதன் மூலம் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கடந்த முறை தனி நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications