5434 ஏக்கர்.. சென்னை-மகாபலிபுரம்-புதுச்சேரி சாலையில் சூப்பர் மாற்றம்.. ஈசிஆரில் ரெடியாகும் மேம்பாலம்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் (Mahabalipuram-Puducherry Highway update) மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் புறவழிச்சாலையில் மணல் நிரப்பி மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாமல்லபுரம் அருகில் உள்ள ஏரி, குளம் பகுதிகளில் இருந்து லாரி, லாரியாக மணல் கொண்டு வரப்பட்டு பணிகள் நடக்கிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி வரை நான்கு வழிச்சாலையை மாற்றும் பணி நடக்கிறது. தற்போது மகாபலிபுரம் வரை கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டன. இடையில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் மகாபலிபுரம் புறவழிச்சாலையிலும் பணிகள் நடந்து வருகிறது.

மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு. அங்கு நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக 5 ஆயிரத்து 434 ஏக்கர் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்த அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டன.
அதன்பின்னர் தனியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டா நிலங்களுக்கு அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்ட உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதில் மாமல்லபுரம், கல்பாக்கம், கடம்பாடி, குன்னத்தூர், மேல் பெருமாள்சேரி, கீழ் பெருமாள்சேரி, மணமை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலங்களில் உள்ள கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் சாலை பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.
சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாலையின் இரு புறமும் உள்ள 500-க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டிருக்கிறது. 4 வழிச்சாலையில், ஒரு பகுதியில் முதல் கட்டமாக இரு வழிச்சாலையில் மாமல்லபுரம் முதல் கடம்பாடி வரை ஒரு பகுதி சாலை பணிகள் முடிக்கப்பட்டு அந்த பகுதியில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்போது மாமல்லபுரம் புறவழிச்சாலை 4 முனை சந்திப்பில் புதுச்சேரி சென்னை செல்லும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் நேராக செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இதற்காக புறவழிச்சாலை மேம்பாலத்தில் இரண்டு பக்கத்தில் மணல் சரியாத வகையில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மேம்பாலம் அமைக்கும் வண்ணம் மணல் நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மணல்கள், மாமல்லபுரம் அருகில் உள்ள ஏரி, குளம் பகுதிகளில் இருந்து லாரி, லாரியாக மணல் கொண்டு வரப்பட்டு, மேம்பாலத்தில் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான ஆயிரக்கணக்கான லோடு லாரிகளில் மணல் வந்த வண்ணம் உள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மொத்த பணிகளும் முடிந்தால், புதுச்சேரிக்கு சென்னையில் இருந்து வெறும் இரண்டு மணி நேரத்தில் போய்விட முடியும்.












Click it and Unblock the Notifications