13 வருடங்களில் இல்லாத உச்சம்.. வெள்ளியின் பொற்காலம் தொடங்கிவிட்டது.. குண்டுமணியாவது வாங்குங்க!
சென்னை: சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி மார்க்கெட்டில் வெள்ளியின் பொற்காலம் தற்போது தொடங்கியுள்ளது என கூறலாம். இந்த ஆண்டில் மட்டும் வெள்ளி விலைகள் 22% உயர்ந்துள்ளது, இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும்.
இந்த மாதத்தில் வெள்ளியின் விலை 5%க்கு மேல் உயர்ந்து, தற்போது $38.15 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த 30 நாட்களில் 0.86% குறைந்துள்ளது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹124 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,24,000 ஆகவும் உள்ளது.

வெள்ளி மீதான முதலீடு
வெள்ளி ஆபரணமாக மட்டும் இல்லாமல் தொழில்துறை சார்ந்த பொருளாகவும் மதிப்பிடப்படுகிறது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்ததன் காரணமாக, 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெள்ளியின் மீதான முதலீடு அதிகரித்தது. சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் காரணமாக வெள்ளி விலை அதிகரித்தது
பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வெள்ளி மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெள்ளி $40-ஐ தாண்டினால், அதன்பின் அதை நிறுத்தவே முடியாது தொடர்ந்து உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன. வெள்ளியின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. வெள்ளி ஆதரவுள்ள பரிவர்த்தனை-வர்த்தக பொருட்கள் (ETP) 2024-ல் US$40 பில்லியனை எட்டி உள்ளது மேலும், சூரிய சக்தி, மின்னணுவியல் மற்றும் மின்மயமாக்கல் போன்ற துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது உலகளாவிய தேவையில் பெரும் பங்கை வகிக்கிறது. இது வெள்ளியின் நீண்டகால முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
MCXல் வெள்ளி விலை புதிய உச்சம்
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஜூலை மாதத்திற்கான வெள்ளி எதிர்கால ஒப்பந்தங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ. 1.09 லட்சத்தைத் தாண்டியது. ஆகஸ்ட் மாதத்திற்கான எதிர்கால ஒப்பந்தங்கள் இன்று MCXல் ஒரு கிலோ ரூ. 1,09,250 என்ற உச்சத்தை எட்டியது. மேலும், இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,050-லிருந்து சுமார் 24 சதவீதம் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு சந்தைகளிலும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. Investorgain தரவுகளின்படி, இந்தியாவில் வெள்ளியின் சராசரி விலை ஒரு கிலோ ரூ. 1,10,000 ஆக இருந்தது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹122 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,22,000 ஆகவும் உள்ளது.
வெள்ளி உயரும்
வரும் மாதங்களில் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி அதிக லாபத்தை அளிக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொருளாதார வல்லுனர்கள் வெள்ளியில் கவனம் செலுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணம், தங்கம்-வெள்ளி இடையிலான விகிதம் ஆகும். இந்த விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டியுள்ளது. அதாவது தங்கம் வெள்ளி வேறுபாட்டை வைத்து இந்த விகிதம் நிர்ணயிக்கப்படும். கோவிட் நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விகிதம் 126 ஐ எட்டி உள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கக்கூடிய அதே பணத்தில் எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்ற அடிப்படையில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தங்கம் வெள்ளியை விட மிக வேகமாக உயர்ந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரிக்கிறது.
ஆனால் வரலாற்று தரவுகளின்படி சென்றால் இந்த விகிதம் வரும் நாட்களில் குறையும். இதன் அர்த்தம் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து.. தங்கத்துடன் உள்ள வேறுபாட்டை குறைக்கும். அதாவது இப்போது உள்ள வேறுபாடு நீடிக்காது. இதன் அர்த்தம் தங்கத்தின் விலைக்கு கொஞ்சம் அருகில் வெள்ளி வரும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் 80 க்கு மேல் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் (2000 முதல்), இந்த சராசரி 68 ஆக உள்ளது, 10 ஆண்டு சராசரி 85 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் அதிகமாக இருந்தது, ஏனெனில் தங்கம் 260% வருமானம் அளித்தது, வெள்ளி 60% வருமானம் கொடுத்தது.
இப்போது இந்த விகிதத்தை சரி செய்ய.. வெள்ளி விலை வேகமாக உயரும். இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.
-
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications