Silver Rate: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை! தமிழகத்தில் white metal-க்கு தட்டுப்பாடு ஏன்?
சென்னை: வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் அதில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் காட்டி வருவதால் தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளியின் விலை கிராம் ரூ 206 ஆகும்.
தங்கத்தில் பல்வேறு நகைகளை வாங்கி போட்டுக் கொண்டாலும் பலர் காலில் அணியும் மெட்டி, கொலுசு, தண்டை உள்ளிட்டவைகளை வெள்ளியில் போடுவது வழக்கம். அது போல் வெள்ளியில் குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, சபரிமலை விளக்கு, பூஜை சாமான் செட், தட்டு, டம்ளர், கிண்ணம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.

அது போல் வரலட்சுமி நோன்புக்காக சுவாமியின் உருவமும் வெள்ளியினால் ஆனதுதான். இப்படிப்பட்ட வெள்ளியின் விலை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிராம் 75 முதல் 77 ஆக இருந்த நிலையில் தற்போது வெள்ளி ஒரு கிராம் ரூ 206 க்கு விற்பனையாகிறது.
இதனால் குழந்தைகளுக்கு காதில் போடும் தோடு, கால் கொலுசு ஆகியவற்றை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள். குழந்தை பிறந்தால் தாய் வீட்டில் இருந்து வெள்ளி அரைஞான்கயிறு, வெள்ளி காப்பு, வெள்ளி பாலாடை, சிறிய கிண்ணம் உள்ளிட்டவை சீதனமாக வழங்குவதற்கு பலர் திண்டாடுகிறார்கள்.
தமிழக நகைக் கடைகளில் தினமும் 20 ஆயிரம் கிலோ வெள்ளி விற்பனையாகிறதாம். மின்சார வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், சூரியசக்தி மின் சாதனம், வான்வெளி, விண்வெளி சாதனங்கள் உள்ளிட்டவைகளில் அதிக அளவு வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.
மொத்த வெள்ளி பயன்பாட்டில் 75 சதவீதமாக இருந்த தொழிற்சாலைகளின் பங்கு தற்போது 85 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தின் மட்டுமில்லாமல் வெள்ளியிலும் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள்.
இதனால் தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் 98 ஆக இருந்த வெள்ளி விலை தற்போது இந்த 10 மாதங்களில் ரூ 206 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளியை பலர் வாங்குகிறார்கள். வெள்ளிக்கட்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
வெள்ளியில் முதலீடு செய்யக் கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் கொண்டு வரப்படலாம். வெள்ளி உயர்வுக்கான காரணங்களை நிபுணர்கள் ஆராய்ந்து வந்தனர்.
இந்த நிலையில் பேட்டரி, சூரிய சக்தி மின் சாதனங்களுக்கு வெள்ளியை பயன்படுத்துவதால் பசுமை உலோகமாக கருதப்படுகிறது. மற்ற நாடுகளை விட நமது நாட்டில் வெள்ளி விலை 8 சதவீதம் கூடுதலாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 250 ஆக இருக்கும் என்கிறார்கள். அது போல் ஒரு கிலோ வெள்ளி ரூ 2.5 லட்சத்தை எட்டும் என்றும் கணித்துள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications