நிர்வாணம்! வேட்டியை உருவிய சிங்கப்பூர் சாமியார்.. பட்டுக்கோட்டை சித்தருக்கு பாரீனில் நேர்ந்த கதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பக்தரின் நோயை குணமாக்கச் சிங்கப்பூர் சென்ற பட்டுக்கோட்டை அருள்வாக்கு ருத்ர சித்தருக்கு அங்கு நேர்ந்த கதி தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நமது ஊரில் சாமியார்களுக்குத் தான் பஞ்சமே இல்லை. எல்லா ஊர்களிலும் சாமியார்கள் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டை எதுவும் எப்போதும் ஏற்படாது.

இந்தச் சூழலில் பட்டுக்கோட்டையில் இருந்து சிங்கப்பூருக்குப் பறந்த அருள்வாக்கு ருத்ர சித்தருக்கு அங்கு நேர்ந்த கதி அவரது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பட்டுக்கோட்டை சாமியார்

பட்டுக்கோட்டை சாமியார்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் மிகவும் புகழ்பெற்ற அருள் வாக்கு சாமியார் ராஜ்குமார். இவர் தன்னிடம் வரும் பக்தர்களின் நோயை விரல்களைக் கொண்டு குத்தியே குணமாக்குவார் எனச் சொல்லப்பட்டது. மேலும், சிறிய குச்சி வைத்துக் குத்தியும் அருள்வாக்கு சொல்லியே பிரபலம் ஆனவர். இவரது பக்தர்கள் இவரது பாதம் தரையில் படக்கூட விடமாட்டார்கள்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

இவர் செல்லும் இடமெல்லாம் மலர்களைத் தூவியே இவரை அழைத்துச் செல்வார்கள். அப்படி பூ போலப் பக்தர்களால் பார்த்துக் கொண்டவருக்குச் சிங்கப்பூரில் மிக மோசமான கதி நேர்ந்து உள்ளது. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் தனது சகோதரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாகவும் ருத்ர சித்தர் நேரில் வந்து ஆசி அளித்துக் குணமடைய வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 ரியல் சாமியார்

ரியல் சாமியார்

பிளைட்டிற்கு தனது சொந்த காசை போட்டு சாமியாரை அழைத்துச் சென்றுள்ளார் அந்த பக்தர். பக்தரின் இந்த அழைப்பை ஏற்றுச் சிங்கப்பூருக்குச் சென்ற ருத்ரா சித்தருக்கு செம ஷாக். அங்குக் கூட்டிச் சென்ற இடத்தில் ஏற்கனவே ஒரு சாமியார் இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென யார் உண்மையான சாமியார் என்பதில் போட்டி ஏற்பட்டு உள்ளது. அப்போது பேசிக் கொண்டே இருக்கும் போது, திடீரென பட்டுக்கோட்டை சாமியார் கழுத்தில் இருந்து காவி துண்டை பிடித்துக் கொண்டார் சிங்கப்பூர் சாமியார்.

 உறைந்த சாமியார்

உறைந்த சாமியார்

"திருட்டு வேலை செஞ்சு ஊரை ஏமாத்துறயா" என்று ஆபாச வார்த்தைகளால் ருத்ர சித்தரைத் திட்டி சண்டையிடத் தொடங்கி உள்ளார். அவர் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காகக் காவி துண்டை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். மேலும், அந்த கதவையும் லாக் செய்து கொண்டனர். அந்த சிங்கப்பூர் சாமியார், "என்னைப் பார்.. என் கண்ணை பார்டா'' மிரட்ட, அந்த பட்டுக்கோட்டை சாமியார் அப்படியே பயத்தில் உறைந்து போய்விட்டார்.

 வேஷ்டி

வேஷ்டி

மிரண்டு போன பட்டுக்கோட்டை சித்தர் தன்னை அழைத்து வந்த நபரைப் பார்த்து, "'இதுக்குதான் என்னைக் கூப்பிட்டு வந்தையா?" எனப் பரிதாபமாகக் கேட்டார். எப்படியோ ஒரு வழியாகக் கதவு திறந்ததும், வெளியே செல்ல முயன்றார் அந்த பட்டுக்கோட்டை சித்தர். அப்போது சிங்கப்பூர் சாமியார் ஜம்ப் செய்து வேட்டியைப் பிடிக்க அது அப்படியே கையோடு வந்துவிட்டது. இதனால் பட்டுக்கோட்டை சாமியார் நிர்வாணமானார்.

வீடியோ

வீடியோ

வீட்டை விட்டு ஆடையின்றி வெளியே வந்த பட்டுக்கோட்டை சாமியார் உள்ளே இருந்த ஆத்திரம் அனைத்தையும் ஆபாச வார்த்தைகளால் கொட்டத் தொடங்கினார். ஆடையின்றி அப்படியே திட்டிக் கொண்டே சென்று காரில் ஏறி அமர்ந்த பட்டுக்கோட்டை சாமியார் அங்கிருந்து புறப்பட்டார். பட்டுக்கோட்டை சாமியார் இப்போது தமிழகம் திரும்பிவிட்ட நிலையில், சிங்கப்பூர் சாமியாரின் ஆதரவாளர்கள் இப்போது அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+