Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் இருந்து வந்த ஒற்றை வாதம்.. ஜன நாயகன் ரிலீஸ்க்கு தடை போட காரணமான பாயிண்ட்.. உடைந்த புதிர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜன நாயகன் திரைப்படம் இன்று வெளியாக வேண்டியது. நேற்றே சான்றிதழ் தருமாறு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவும் போட்டார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வில் முறையிட்ட மத்திய அரசுதரப்பு வழக்கறிஞர், தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு தடை விதிக்கமாறு கோரினார். அவரும் டெல்லியில் இருந்து சொலிசிட்டர் மேத்தாவும் வைத்த ஒற்றை வாதம் ஜன நாயகன் முடங்க காரணமாக மாறியது. அது பற்றி பார்ப்போம்.

ஜனநாயகன், பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆவதாக இருந்தது. பராசக்தி படம் தான் நேரடியாக மத்தியஅரசு மற்றும் இந்திக்கு எதிராக இருந்தது. ஆனால் விஜய்யின் ஜன நாயகனில் அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே என்றே பலரும் கருத்துக்களை கூறி வந்தார்கள். ஏனெனில் தெலுங்கு படமான பகவந்த் கேசரியின் ரீமேக் என்றும் அதில் வரும் காட்சிகள் அப்படியே தமிழுக்கு ஏற்ப சற்று மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

single argument that came from Delhi the point that caused the ban on the release of Jana nayagan

ஆனால் பராசக்தி, ஜனநாயகன் இரண்டுமே தணிக்கை சான்றிதழை உடனே பெறவில்லை.. மறு தணிக்கைக்கு போகும் நிலையே ஏற்பட்டது. ரிவைசிங் கமிட்டி படத்தை பார்த்து தான் சான்றிதழ் தரும் என்கிற நிலை ஏற்பட்டது. இதில் பராசக்தி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடாமல் ரிவைசிங் கமிட்டில் படத்தை சமர்பித்தது. அந்த கமிட்டி படத்தில் சில காட்சிகளை தூக்க சொல்லி விட்டு சென்சார் கொடுத்துவிட்டது. திட்டமிட்டப்படி ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வெட்டப்பட்டு படத்திற்கு சான்றிதழும் நேற்றே பெறப்பட்டு விட்டது. இதனால் திட்டமிட்டபடி பராசக்தி படம் வெளியாகி உள்ளது.

ஆனால் ஜனநாயகன் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது தான் படம் வெளியாக தாமதம் என்கிறார்கள் சில பாஜக ஆதரவாளர்கள்.. ஏனெனில் சென்சார் கமிட்டி மீண்டும் படத்தை பார்த்து சான்றிதழ்வழங்கி இருக்கும்.. இப்போது நீதிமன்றம் போனதால் சிக்கலாகிவிட்டதாக கூறுகிறார்கள்.

அதேபோல் நீதிமன்றத்தில் டெல்லியில் இருந்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் காணொயிலியில் ஆஜராகிவைத்த வாதமும் படம் முடங்க காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா நேற்று ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு அளித்தார். அதில் அவர் கூறுகையில், "'ஜனநாயகன்' படத்தை கடந்த டிசம்பர் 22-ந்தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் என்றும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி, யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்கள்.

அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறுஆய்வு செய்யவேண்டும் என்று புகார் கொடுத்தார். இந்த புகாரில் உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது. அந்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், டிசம்பர் 22-ந்தேதி 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைக்க தலைவருக்கு அதிகாரம் கிடையாது,

எனவே, 'ஜனநாயகன்' படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும்" இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரித்தனர்.

அப்போது, ஆன்லைன் மூலம் டெல்லியில் இருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசனும் ஆஜராகி, 'ஜனநாயகன் படத்தை தணிக்கை மறுஆய்வு குழுக்கு பரிந்துரை செய்ததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. 7-ந்தேதி புகார் நகல் தாக்கல் செய்தோம். 9-ந்தேதி (நேற்று) வழக்கின் தீர்ப்பை நீதிபதி அவசர கதியில் பிறப்பித்து விட்டார். பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அவகாசம் வழங்கவில்லை. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள், இடங்கள் இடம் பெற்றுள்ளது என புகார் வந்ததால், படம் மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

இவ்வாறு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரவில்லை. தணிக்கை சான்றிதழ் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி உத்தரவிட்டது சரியில்லை. எனவே, அவரது உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்' என்று வாதிட்டார்.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, 'தனி நீதிபதி முழுமையாக விசாரித்துதான் தீர்ப்பு அளித்துள்ளார். படத்தை பார்த்த குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மறுஆய்வு குழுவுக்கு இதுபோல பரிந்துரை செய்ய முடியாது. இது புதுவிதமான நடவடிக்கையாகயாக இருக்கிது. படத்தை 9-ந்தேதி (நேற்று) வெளியிட திட்டமிட்டு, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட செயலால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை' என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், 'தணிக்கை சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அப்படியிருக்கும்போது, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே படத்தை வெளியிடும் நாளை எப்படி முடிவு செய்தீர்கள்?. இவ்வாறு முடிவு செய்து, வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என நீதித்துறைக்கு அழுத்தம், நிரப்பந்தம் கொடுக்கக்கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய கூட அவகாசம் கொடுக்காத அளவுக்கு இந்த வழக்கில் என்ன அவசரம் உள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் தான் ஜனநாயகன் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் போனது. விஜய் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த உத்தரவின் மூலம் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர். படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள், இடங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறித்தான் தணிக்கை வாரியம் மறுதணிக்கைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரவில்லை.. மாறாக தணிக்கை சான்றிதழ் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசின் இந்த வாதம் தான் ஜனநாயகன் வெளியாகாமல் போக காரணமாக பார்க்கப்படுகிறது. ரிவைசிங் கமிட்டி பார்த்திருந்தால் பொங்கலுக்கு முன்பே படம் ரிலீஸ் ஆகி இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+