கண்ணீரில் காசா .. இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்தனும்! பாலஸ்தீன் கொடியுடன் சென்னை பல்கலை மாணவர்கள்
சென்னை: பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி மக்களை கொன்று குவித்து வரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழகத்தில் SIO மாணவர் பதாகைகளை ஏந்தினர்.
இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பல கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஸாவில் போர் நிறுத்தத்தை கொண்டுவர வலியுறுத்தியும், பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகம் சேப்பாக்கம் வளாகத்தில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், SIO மாநில பொதுச் செயலாளர் ஃபாயிஸ், மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா ஆகியோர் உரை நிகழ்த்தினர். அப்போது அவர் பேசுகையில், "கடந்த அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து பாலஸ்தீன் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதுவரை அங்கே சுமார் 27,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பாதி பேர் சிறுவர்களும் பெண்களும்தான் என்பது இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தும் இஸ்ரேல் தன் அராஜகத்தை நிறுத்துவதாக இல்லை. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுத்தளங்களை இஸ்ரேல் குறிவைத்துத் தகர்த்து வருவதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். குறிப்பாக, காஸாவில் உள்ள கல்வி வளாகங்களில் இஸ்ரேலின் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டு, மாணவர்கள் கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ரஃபாத் அல்அறீர் என்ற பேராசிரியர் கொல்லப்பட்டது இங்கு நினைவூட்டப்பட வேண்டியது. அவர் வெறும் கல்வியாளர் மட்டுமல்ல, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு மாபெரும் பங்களிப்பைச் செய்தவர். அவர் காஸா பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கியமான எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளரும்கூட. சமீபத்தில் அவரை இலக்கு வைத்துக் கொன்று உள்ளது இஸ்ரேல். இப்படியான அட்டூழியம் கடும் கண்டனத்துக்குரியது"
தொடர்ந்து உரையாற்றிய SIO மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா, "பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வருவது வெறும் தாக்குதல் அல்ல; இனப்படுகொலை. ஈவிரக்கமின்றி இஸ்ரேலிய ஆக்கிமிப்புப் படை செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய ராணுவ பலம் கொண்ட ஒரு நாட்டை பாலஸ்தீனர்கள் தன் நெஞ்சுரத்தால் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தனை காலம் போர் நீடிப்பதும், மக்களைக் கொல்வதைத் தவிர வேறெந்த பலனையும் இஸ்ரேல் ஈட்டாததும் அந்நாட்டுக்கு அவமானகரமான ஒன்று.
இன்றைக்கு உலக அரங்கில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மிகச் சில வளர்ந்த நாடுகள் மட்டுமே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடி உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. இச்சூழல் பாலஸ்தீனர்களுக்குக் கிடைத்த வெற்றி" என்று கூறினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வில் மாணவர்கள் கலந்துகொண்டு, இஸ்ரேலுக்கு எதிராகத் தம் கண்டனங்களைப் பதிவு செய்தனர். பதாகைகள் வைத்து போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தினர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications