2002ல் நடந்த SIR.. தமிழ்நாட்டில் 50 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!
சென்னை: தமிழ்நாட்டில் 2002 முதல் 2005 வரை நடத்தப்பட்ட வாக்காளர் திருத்தத்தில் சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் சுமார் 27 லட்சம் பேர் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக கூறிய தராசு ஷ்யாம், இனி அரசியல் கட்சிகள் வரைவு வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை தமிழ்நாட்டில் SIR பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் SIR பணிகள் நிறைவடைந்து சூழலில் தேர்தல் ஆணையம் தரப்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக குறைந்துள்ளது. மொத்தமாக 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், முன்னதாக 2002 முதல் 2005 வரை SIR பணிகள் நடத்தப்பட்டது. அப்போது சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதற்கு முக்கியமான காரணம் இறந்தவர்கள் பட்டியல் தான். தற்போதைய SIRலும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் கால் பகுதியாக இருக்கிறது.
வழக்கமாக இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்குவதே இல்லை. சாதாரணமாக ஒரு தொகுதியில் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 2004ல் இருந்து கணக்கிட்டால் 10 லட்சம் பேர் வருவார்கள். அதேபோல் இரட்டை வாக்குகள் வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பலரும் சொந்த ஊரில் வாக்குரிமை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
அவர்களை கண்டறிவதுதான் சிரமம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருந்திருக்கின்றன. அதனால் இதற்கு திமுக காரணம் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் படிவங்கள் பெற்றப்பட்ட 99 சதவிகிதம் பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தமிழ்நாட்டில் இறந்தவர்கள் பட்டியலில் உள்ள 26.94 லட்சம் நீக்கப்பட்டுள்ளனர்.
அதனால் இடம்பெயர்ந்தோர் பட்டியலில் மட்டுமே பிரச்சனை இருக்கிறது. இனி அதனை சரி செய்வார்கள். சொந்த ஊரில் வாக்குரிமை வைத்திருப்பவர்கள் பலரும் சென்னை, கோவை, மதுரையில் வேலை பார்ப்பார்கள். பிஎல்ஓ-க்களில் படிவங்களை கைப்பற்றி மீணும் சமர்ப்பித்து மிகவும் சுறுசுறுப்பாக இருந்த கட்சி என்றால் திமுக தான். காங்கிரஸ், பாஜக மட்டுமே சுறுசுறுப்பாக இல்லை.
வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதே அரசியலில் முதல் பணி. வரைவு வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்வோம். இது வழக்கமாக செய்யும் விஷயம் தான். SIR முறையில் இனி நாம் தங்கி இருக்கும் இடத்தில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்குதான் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் மக்கள் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications