முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் வாக்குகள் நீக்கம்!
சென்னை: SIR பணிகளுக்கு பின் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் சுமார் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் SIR பணிகளைத் தேர்தல் ஆணையம் நடத்தியது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள், டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. 40 நாட்கள் நடந்த பணிகளின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பிஎல்ஓ-க்களுக்கு உதவியாக படிவங்களை பூர்த்தி செய்து சமர்த்தனர். அதில் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது.

இதற்கிடையே இப்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு முன்பாக சென்னையில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 வாக்குகள் இருந்தன. தற்போது SIR பணிகளுக்கு பின் 25 லட்சத்து 79 ஆயிரத்து 676 வாக்குகளாக இருக்கிறது.
சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,56,555ஆகவும், தொடர்பு கொள்ள முடியாதோர் 27,328ஆகவும், இடம் மாறியோர் 12,22,164 ஆகவும், இரட்டைப் பதிவாக 18,772 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் 35.58 சதவிகித வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 16 தொகுதிகளிலும் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 841 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆண் வாக்காளர்கள் 90,098 பேரும், பெண் வாக்காளர்கள் 96,709 பேரும், 3ஆம் பாலினத்தவர் 34 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் இருந்து 1.03 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications